உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் ரோஷினி. இவரை கடந்த மூன்று வருடங்களில் ஏழு முறை பாம்பு கடித்துள்ளது. இதில் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் ஒவ்வொரு முறையும் அவருக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்டதன் காரணமாக உயிர் தப்பி இருக்கிறார். தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து அவர் குடும்பத்தினர் கூறுகையில், அவர் வீட்டில் வேலை செய்தாலும் சரி, வெளியில் வேலை செய்தாலும் சரி எங்கிருந்தாவது பாம்பு வந்து கடிப்பது வழக்கமாகி உள்ளது. ஒவ்வொரு முறையும் பல இடங்களில் பாம்பு கடித்திருப்பதாகவும் சிகிச்சை காரணமாக உயிர் தப்பி உள்ளதாகவும் கூறுகிறார்கள்.
தற்போது இது குறித்து கிராம மக்களிடையே பல விதமான செய்திகள் பரவி வருகிறது. இது குறித்து அந்தப் பெண்ணுக்கு மருத்துவ சிகிச்சை அளித்து வரும் மருத்துவர் கூறுகையில், “இதில் மகிழ்ச்சியான செய்தி என்னவென்றால் தற்போது அவருடைய உடல்நிலை சீராக உள்ளது. விரைவில் முழுமையாக குணமடைவார் என்ற நம்பிக்கை இருக்கிறது. பலமுறை பாம்பு கடித்து உள்ளதால் இது வழக்கத்திற்கு மாறான நிகழ்வாக இருந்தாலும் மருத்துவ ரீதியாக இது சாத்தியமான ஒன்றாக இருக்கலாம்” என்று கூறி இருக்கிறார்.
மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைன் மாவட்டத்தில் உள்ள ஹர்னியா கேடி கிராமத்தில், ஒரு பெண் அவரது குடும்பத்தினரால் கொடூரமாக தாக்கப்பட்டு,…
தனியார் மருத்துவக் கல்லூரிகள் அரசு நிர்ணயித்த வழிகாட்டுதலின்படி மட்டுமே கட்டணங்களை வசூலிக்க வேண்டும் என்று நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை…
மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில், பணத் தகராறு காரணமாக ஸ்பா உரிமையாளர் ஒருவர் கடத்தப்பட்டு, ஹோட்டல் அறை ஒன்றில் வைத்து…
முட்டை சைவ உணவா அல்லது அசைவ உணவா என்ற விவாதம் பல ஆண்டுகளாக நம்மிடையே தொடர்ந்து வருகிறது. பொதுவாக, முட்டை…
மும்பை அந்தேரி மேற்கு பகுதியில் உள்ள எஸ்.ஆர்.ஏ அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் திடீரென ஒரு பெரும் தீ விபத்து ஏற்பட்டது.…
திரைத்துறையிலிருந்து வந்து தமிழ்நாட்டை ஆளும் நான்காவது நபர் என்ற பெருமையுடன், தற்போது தமிழக முதலமைச்சராக விஜய் செயல்பட்டு வருகிறார். ஆரம்பத்தில்…