தமிழகத்தில் அடுத்தடுத்து கைது.. தவெகவினர் அதிர்ச்சி… CM விஜய்க்கு அடுத்த சிக்கல்…!

By Nanthini on வைகாசி 16, 2026

Spread the love

வெளிநாட்டு குடியுரிமை (NRI) பெற்ற 25 பேர், விதிகளுக்குப் புறம்பாகத் தேர்தலில் முறைகேடாக வாக்களித்த புகாரில் சென்னை, மதுரை மற்றும் திருச்சி விமான நிலையங்களில் நடத்தப்பட்ட அதிரடி சோதனையின் போது தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர். கைதானவர்களில் சிலர், தாங்கள் ‘தமிழக வெற்றிக் கழகம்’ (தவெக) கட்சிக்கு வாக்களித்ததாகச் சமூக வலைத்தளங்களில் (SM) பதிவிட்டிருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்தச் சூழலில், தங்கள் கட்சிக்கு வாக்களித்ததாகக் கூறி சிக்கலில் மாட்டியுள்ள அவர்களுக்குத் தேவையான சட்ட உதவிகளை வழங்குவது குறித்தும், அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்தும் தவெக தலைமை தீவிரமாக ஆலோசனை நடத்தி வருவதாக அரசியல் வட்டாரங்களில் இருந்து நம்பத்தகுந்த தகவல்கள் வெளியாகியுள்ளன.