train

21 நாட்களில் 13 நாடுகளுக்கு சுற்று பயணம்… அதுவும் ரயிலில்… எங்கு எப்படி தெரியுமா…?

By admin on மார்கழி 20, 2024

Spread the love

பயணம் செய்வது என்றால் யாருக்கு தான் பிடிக்காது. பரபரப்பான வாழ்க்கைக்கு மத்தியில் ஒரு சுற்றுலா சென்றால் நன்றாக இருக்குமே என்று நினைப்பவர்கள் பலர். கிடைக்கும் நேரங்களில் எல்லாம் அருகில் எங்கேயாவது ரிலாக்ஸ் செய்வதற்கு நம் மனது தேடும். இந்தியாவில் பல இடங்கள் சுற்றுலா தளமாக இருக்கிறது. அதையும் தாண்டி வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்ல வேண்டும் என்பது பலரின் கனவாக இருக்கிறது. ஆனால் அதற்கு விசா பாஸ்போர்ட் அதுமட்டுமில்லாமல் பணமும் அதிகம் செலவாகும். ஆனால் ஒரே ஒரு பயணத்தில் 13 நாடுகளை நீங்கள் சென்று பார்த்து ரசிக்க முடியும் என்றால் நம்ப முடிகிறதா. ஆம் அதை பற்றி தான் இனி பார்க்க போகிறோம்.

   

ரயில் பயணத்தின் வழியாக 21 நாட்களில் 13 நாடுகளை உங்களால் சுற்றி பார்க்க இயலும். இதைத்தான் உலகின் மிக நீண்ட ரயில் பயணம் என்று கூறுகிறார்கள். இந்த பயணத்தின் போது நீங்கள் பாரிஸ் சிங்கப்பூர் ஸ்பெயின் தாய்லாந்து என பல முக்கியமான நாடுகளை ரசிக்க முடியும்.

   

இந்த உலகின் மிக நீண்ட ரயில் பயணமானது போர்ச்சுகளில் இருந்து சிங்கப்பூருக்கு செல்லும் ரயில் ஆகும். இந்த ரயில் 13 நாடுகளை உள்ளடக்கிய பயணத்துடன் சுற்றுலா பயணிகளுக்கு மிகச்சிறந்த அனுபவத்தை கொடுக்கிறது. இந்த ரயிலில் ஏறினால் 21 நாட்களில் 13 நாடுகளை கடந்து செல்லும். பயணத்தின் போது 11 இடங்களில் ரயில் நிற்கும். வானிலை சம்பந்தமாக ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால் இந்த பயண நாட்கள் அதிகரிக்கலாம். இந்த ரயில் மொத்தம் 21 நாட்களில் 18,755 கிலோமீட்டர் தூரம் பயணிக்கிறது.

 

போர்ச்சுகளின் அல்கரணியில் இருந்து புறப்பட்டு ஸ்பெயின் பிரான்ஸ் ரஷ்யா சீனா வியட்நாம் தாய்லாந்து வழியாக சிங்கப்பூரை சென்றடைகிறது. வழியில் பாரிஸ் மெக்சிகோ பெய்ஜிங் பாங்காக் போன்ற நகரங்களை கடந்து செல்கிறது. ஐரோப்பாவின் அழகான நாடுகளுக்கு அழைத்துச் செல்லும் அதே வேளையில் சைபிரியாவின் குளிர் நிறைந்த பிரதேசங்களையும் காண முடியும். இந்த ரயிலில் பயணிக்க நீங்கள் டிக்கெட்டுகளை முன் பதிவு செய்ய வேண்டும். ரயில் கட்டணத்திற்கு உள்ளாகவே உணவு தங்குமிடம் மற்றும் அனைத்து வசதிகளும் அடங்கும். இந்த ரயில் பயணத்திற்கு கட்டணமாக 1350 அமெரிக்க டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் 1,13,988 லட்ச ரூபாய் ஆகும்.