இன்றைய காலகட்டத்தில் யாருமே பணத்தை கையில் எடுத்து செல்வதில்லை. கிரெடிட் கார்டு டெபிட் கார்டு UPI பரிவர்த்தனைகள் போன்றவற்றின் மூலம் பணத்தை செலுத்துகிறார்கள். அதனால் பணத்தின் வேல்யூ கூட குறைந்துவிட்டது என்று சொல்லலாம். தற்போது பணமே இல்லையென்றாலும் கூட உங்களால் ஷாப்பிங் செய்ய இயலும் பொருட்களை வாங்க இயலும். அதற்கு உதவும் வகையில் தான் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது UPI கிரெடிட் கார்டு. இது எப்படி இயங்குகிறது இதன் சிறப்பம்சம் என்ன என்பதை பற்றி இனி காண்போம்.

பொதுவாக பணம் இல்லாதவர்கள் ஒரு சில பொருட்களை வாங்கும் போது கிரெடிட் கார்டை பயன்படுத்தி வாங்கிவிட்டு பின்பு கடனை அடைப்பார்கள். இனி UPI மூலமாக நீங்கள் பணம் இல்லாமல் கடனாக உங்கள் பொருட்களை வாங்க இயலும். UPI பயனர்களுக்கு தடையற்ற பண பரிவர்த்தனை அனுபவத்தை பெற கிரெடிட் கார்டுகளை UPI உடன் இணைக்க RBI அனுமதித்து உள்ளது. கார்டுகளை ஸ்வைப் செய்வதிலிருந்து ஓடிபி பகிர்வது வரை ஏற்படும் தொந்தரவின் காரணமாக அதிலிருந்து விடுபடுவதற்கு இந்த அனுமதி வழங்கப்பட்டு இருக்கிறது.
இந்த UPI கார்டு மூலம் வங்கியில் UPI ஆப்பை பதிவிறக்கம் செய்து வணிகர்கள் மற்றும் சிறு விற்பனையாளர்களுக்கு பணம் செலுத்தலாம். யுபிஐ சேவையில் உள்ளதை போல் இல்லாமல் சேமிப்பு வங்கி கணக்கில் இருந்தால் மட்டுமே பணம் அனுப்ப முடியும். UPI இன் கீழ் நீங்கள் கிரெடிட் கார்டில் பணத்தை ட்ரான்ஸ்பர் செய்ய முடியும்.
கிரெடிட் கார்டுகளை UPI உடன் இணைப்பது மூலம் குறிப்பிட்ட நேரத்தில் பயனர்கள் வங்கி கணக்கில் பணம் இல்லாவிட்டாலும் சில பொருட்களை வாங்கலாம் அல்லது பணம் செலுத்தலாம். இது கடனின் கீழ் வரும். அனைத்து பேமண்டிலும் ஒருங்கிணைக்கப்பட்ட கிரெடிட் கார்டு பில் மூலம் செலுத்தப்படுவதால் அவர்களது பேங்க் ஸ்டேட்மென்ட் குழப்பம் அடையாது.

இந்த UPI கிரெடிட் கார்டு எப்படி செயல்படும் என்றால் கிரெடிட் கார்டு வங்கி கணக்குக்கு பதிலாக உங்களது யுபிஐ ஐடியுடன் இணைக்கப்பட்டிருக்கும். யுபிஐ மூலம் பணம் செலுத்தும் போது அந்த தொகை வங்கி கணக்கிலிருந்து கழிக்கப்படுவதற்கு பதிலாக கிரெடிட் கார்டில் இருந்து வசூலிக்கப்படும். திருப்பி செலுத்தும் போது வழக்கமான பில்டிங் சுழற்சியின்படி பயனர் கிரெடிட் கார்டுக்கு பில் செலுத்த வேண்டும். இந்த UPI கிரெடிட் கார்டு வணிகர்களுக்கும் மக்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
