இந்தியாவில் நாள்தோறும் லட்சக்கணக்கான பயணிகள் இந்திய ரயிலை பயன்படுத்தி வருகிறார்கள். ரயில் பயணம் என்பது பலருக்கு மலிவான ஒன்றாகவும் வசதியான ஒன்றாகவும் இருக்கிறது. பயணிகளின் சௌகரியத்தை மேம்படுத்தும் வகையில் நாளுக்கு நாள் இந்திய ரயில்வே பல மேம்பட்ட திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வரிசையில் தற்போது இந்திய ரயில்வே ஒரு சூப்பரான திட்டத்தை கொண்டு வந்திருக்கிறது. இந்த திட்டத்தின் கீழ் நீங்கள் ஒரு ரூபாய் கூட செலுத்தாமல் ரயில் டிக்கெட் புக் செய்து கொள்ளலாம். அது எப்படி எவ்வாறு செய்யலாம் போன்ற விவரங்களை பற்றி இனி காண்போம்.
அவசர தேவைகளுக்கு பயணம் செய்பவர்கள் சீட் கன்ஃபார்ம் செய்ய வேண்டிய நெருக்கடியில் இருப்பவர்கள் இந்த ரயில்வேயின் புதிய திட்டத்தை பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த திட்டத்தில் புக் செய்துவிட்டு பிறகு பணத்தை கட்டலாம். நீங்கள் டிக்கெட் புக் செய்ததிலிருந்து சுமார் 14 நாட்களுக்கு பிறகு நீங்கள் கட்ட வேண்டிய பணத்தை செலுத்திக் கொள்ளலாம். இதற்கு இந்திய ரயில்வே துறையின் Book Now Pay Later ஆப்ஷனை பயன்படுத்த வேண்டும்.
இந்த Book Now Pay Later ஆப்ஷனின் கீழ் எந்த கட்டணமும் செலுத்தாமல் டிக்கெட் புக் செய்து கொள்ளலாம். டிக்கெட் புக் செய்த நேரத்தில் இருந்து 14 நாட்களுக்குள் முழு தொகையையும் கட்ட வேண்டும். சரியான நேரத்தில் பணத்தை செலுத்தாவிட்டால் கூடுதல் கட்டணம் வசூலிக்க படாது. நீங்கள் பணம் செலுத்துவதில் தாமதம் ஏற்பட்டால் 3.5 சதவீதம் சேவை கட்டணம் செலுத்த வேண்டி இருக்கும்.
இந்த திட்டத்தை பயன்படுத்திக்கொள்ள நீங்கள் முதலில் IRCTC கணக்கை தொடங்கி அதில் உள்நுழைய வேண்டும். அதற்கு பிறகு Book Now கிளிக் செய்து உங்களது தகவல்களை சமர்ப்பிக்க வேண்டும். பிறகு கட்டண பக்கம் திறக்கும்போது கிரெடிட் கார்டு டெபிட் கார்டு நெட் பேங்கிங் அல்லது BHIM செயலி மூலம் பணம் செலுத்தும் விருப்பத்தை பெறுவீர்கள். இதில் Book Now Pay Later என்ற ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும். இதன் மூலம் நீங்கள் பணம் செலுத்தாமல் ரயில் டிக்கெட் புக்கிங் செய்து கொள்ளலாம்.
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள புதுச்சேரி ரிசார்ட் விவகாரத்தின் பின்னணியில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) அதிரடி மூவ்…
தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை கண்டிராத ஒரு புதிய திருப்பமாக, நடிகர் விஜய்யின் அரசியல் எழுச்சியை எதிர்கொள்ளப் பாரம்பரிய எதிரிகளான…
தமிழக அரசியலில் நடிகர் விஜய்யின் கட்சி (தமிழக வெற்றி கழகம் - தவெக) 107 எம்.எல்.ஏ-க்களுடன் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தும்,…
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்ற போதிலும், ஆட்சி அமைப்பதில்…
தமிழக சட்டமன்றத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தும், ஆட்சி அமைக்கத் தேவையான பெரும்பான்மை இல்லாததால் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம்…
சேலம் மேற்கு தொகுதியின் முன்னாள் எம்எல்ஏ அருள், தேர்தலில் தோல்வியுற்ற பிறகு தனது வாழ்வாதாரப் பணிகளுக்குத் திரும்பியுள்ளதாகச் சமூக வலைதளங்களில்…