யுனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ் (UPI) உள்நாட்டு டிஜிட்டல் பேமெண்ட் துறையில் புரட்சியை ஏற்படுத்தியுள்ளது. கிட்டத்தட்ட ஸ்மார்ட் போன் வைத்திருக்கும் அனைவரும் UPI மூலமாக பணம் செலுத்துகின்றனர். மேலும் பணம் செலுத்தும் வசதியின் காரணமாக அவை அவர்களுக்கு சாதகமாக உள்ளன. UPI சிறிய தேவைகளுக்கு கூட பயன்படுத்தப்படலாம். கூகுள் பே, போன் பே, பேடிஎம், அமேசான் பே போன்ற ஆப்ஸ் மூலம் யூசர் இன்டர்ஃபேஸ் எளிதாக பணம் செலுத்த வசதியாக இருப்பதால்,யுபிஐ பணம் செலுத்துவோரின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது.
இந்நிலையில் வங்கி கணக்கு இல்லாதவர்களும் UPI மூலம் பணம் அனுப்பும் விதமாக, ‘UPI Circle: Full Delegation’ என்ற புதிய வசதியை BHIM செயலி அறிமுகப்படுத்தியுள்ளது. வங்கி கணக்கு வைத்திருக்கும் முதன்மை பயனர்கள் (‘Primary Users’), UPI ஆப்பில் உள்ள ‘UPI Circle’ என்ற ஆப்ஷனுக்கு சென்று, வங்கி கணக்கு இல்லாத 5 பேரை துணை பயனர்களாக சேர்த்து கொள்ளலாம். துணை பயனர்களுக்கு உருவாகும் VPA ID மூலம், அவர்கள் அதிகபட்சமாக ரூ .5,000 வரை UPI பணப் பரிவர்த்தனை மேற்கொள்ளலாம்.
