ஆதார் முதல் வங்கி கணக்கு வரை…. இன்று(நவ..1) முதல் அமலுக்கு வந்த மாற்றங்கள் என்னென்ன?…. இதோ முழு விவரம்…!

Spread the love

பொதுவாகவே ஒவ்வொரு மாதத்தின் தொடக்கத்திலும் நிதி சார்ந்த சில முக்கிய மாற்றங்கள் அமலுக்கு வருவது வழக்கம். அதன்படி நவம்பர் 1 முதல் வங்கி வாடிக்கையாளர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் டிஜிட்டல் பரிவர்த்தனை பயனர்களுக்கு பல முக்கிய நிதி விதிகள் அமலுக்கு வர உள்ளது. அதில் புதிய வங்கி காப்பாளர் விதிகள், எளிமையான ஆதார் புதுப்பித்தல், எஸ் பி ஐ கிரெடிட் கார்டு கட்டண மாற்றம், யுபிஎஸ் மாற்றம் வரை நீட்டிப்பு மற்றும் புதிய ஜிஎஸ்டி பதிவு முறை என பல அமலுக்கு வருகின்றன.

புதிய விதிகளின்படி நவம்பர் 1 முதல் வாடிக்கையாளர்கள் தங்களுடைய வங்கி கணக்கு, லாக்கர் அல்லது பாதுகாப்பு சேமிப்பு பொருள்களுக்கு அதிகபட்சமாக நான்கு நபர்களை காப்பாளர்களாக நியமிக்க முடியும். இது அவசர நிலைகளில் குடும்பத்தினர் நிதியை எளிதாக அணுகவும் உரிமை தொடர்பான வழக்குகளை தடுப்பதற்கும் உதவியாக இருக்கும். காப்பாளர் சேர்த்தல் மற்றும் மாற்றம் நடைமுறையையும் எளிமைப்படுத்தப்பட்டுள்ளது.

அடுத்ததாக எஸ்பிஐ கிரெடிட் கார்டு பயணங்கள் ஆயிரம் ரூபாய்க்கு மேற்பட்ட மூன்றாம் தரப்பு செயலிகள் அல்லது வாலட் டாப் அப் மற்றும் கல்வி கட்டணம் போன்ற பரிவர்த்தனைகளில் ஒரு சதவீத கட்டணம் செலுத்த வேண்டும்.

ஆதார் புதுப்பித்தல் முறையில் இந்திய தனித்துவ அடையாள ஆணையம் ஆவண பதிவேற்றவில்லாமல் பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் போன்ற விவரங்களை ஆன்லைன் மூலமாக திருத்தும் வசதியை அறிமுகம் செய்கிறது. பயோமெட்ரிக் மாற்றங்களுக்கு மட்டுமே நேரடியாக ஆதார் மையம் செல்ல வேண்டும். புதிய கட்டணங்களின்படி பயோமெட்ரிக் அல்லாத புதுப்பித்தலுக்கு 75 ரூபாயும் பயோமெட்ரிக் புதுப்பித்தலுக்கு 125 ரூபாயும் கட்டணம் வசூலிக்கப்படும்.

ஓய்வூதியதாரர்கள் நவம்பர் 1 முதல் நவம்பர் 30ஆம் தேதிக்குள் வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். அரசு ஊழியர்கள் தேசிய ஓய்வூதிய திட்டத்திலிருந்து ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கு மாறுவதற்கான அவகாசம் நவம்பர் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேசமயம் சிறு வணிகங்களுக்கான புதிய செயல்முறையை எளிதாகும் புதிய ஜிஎஸ்டி பதிவு முறையும் நவம்பர் 1 இன்று முதல் அமலுக்கு வருகின்றது.

Nanthini

Recent Posts

“ஷாக்… தேசிய கீதத்தின் போது 15 வயது இந்திய வீரருக்கு நேர்ந்த விசித்திர சம்பவம்… பின்னணியில் இருக்கும் உண்மை என்ன…?”

இந்தியா மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 போட்டியின் போது, தேசிய கீதம் இசைக்கப்பட்ட சமயம் வைபவ் சூர்யவன்ஷிக்கு…

6 மணத்தியாலங்கள் ago

“‘திருமணம் பிடிக்கலனா விட்ருக்கலாம்… எதுக்கு என் மகன கொன்னீங்க…?’ – கொலை வழக்கில் மனம் உடைந்து.. கண்ணீருடன் தந்தை எழுப்பிய… நியாயமான கேள்வி…!!”

மகாராஷ்டிராவின் புனே அருகே உள்ள லோகாட் கோட்டை பகுதியில், இளம் தொழிலதிபர் கேதன் அகர்வால் பள்ளத்தாக்கில் விழுந்து உயிரிழந்த சம்பவம்…

6 மணத்தியாலங்கள் ago

விஜய்க்கு செக் வைக்க சீமானை களம் இறக்குகிறதா திமுக…? அம்பாசமுத்திரத்தில் அதிரடி திருப்புமுனை… பின்னணியில் மெகா கூட்டணி வியூகம்…!!

தமிழகத்தில் நடைபெறவுள்ள 6 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில், தமிழக வெற்றிக் கழகத்தின் கூட்டணியை வீழ்த்த ஆளுங்கட்சியான திமுக தீவிரமாகத் திட்டமிட்டு வருகிறது.…

6 மணத்தியாலங்கள் ago

ச்சீ… பெற்ற தந்தை என்றும் பாராமல்… நிலத்துக்காக நடுரோட்டில் கொடூரமாக இழுத்துச் சென்று தாக்கிய பிஎஸ்எஃப் வீரர்… நெட்டிசென்கள் கொந்தளிப்பு…!!

உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில், நிலத் தகராறு காரணமாக எல்லைப் பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் தனது வயதான தந்தையை…

6 மணத்தியாலங்கள் ago

மனிதநேயம் எங்கே போனது…? திருமண ஊர்வலத்தில் குதிரை மீது… நடத்தப்பட்ட கொடூர தாக்குதல்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!

இந்தூர் மாவட்டம் கம்பேல் பகுதியில் உள்ள ஒரு திருமண ஊர்வலத்தின் போது, குதிரை ஒன்று நடனமாட மறுத்ததால் அதன் உரிமையாளர்…

6 மணத்தியாலங்கள் ago

த்ரிஷாவுக்கு திருமணத்தில் நம்பிக்கையே இல்லையா…? வைரலாகும் ‘தக் லைஃப்’ மேடை ரகசியம்…! த்ரிஷாவின் பழைய வீடியோ இப்போது திடீரென வைரலாவது ஏன்…?

திரையுலகில் இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக முன்னணி கதாநாயகியாக வலம் வரும் நடிகை த்ரிஷா, எப்போதும் தனது தனிப்பட்ட வாழ்க்கையை பொதுவெளியில்…

7 மணத்தியாலங்கள் ago