ஆண்டிற்கு ரூ.21 லட்சம் வரை சம்பளம்….! பொதுத்துறை வங்கிகளில் 940 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு…. தகுதிகள் என்னென்ன…? மிஸ் பண்ணாம உடனே அப்ளை பண்ணுங்க…!!

By Devi Ramu on ஆடி 31, 2026

Spread the love

இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கிகளான பஞ்சாப் நேஷனல் வங்கி மற்றும் யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா ஆகிய இரண்டிலும் சேர்த்து மொத்தம் 940 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. பஞ்சாப் நேஷனல் வங்கியில் லோக்கல் பேங்க் ஆபீசர் பதவிக்கு 545 இடங்கள் காலியாக உள்ளன; இதில் தமிழகத்திற்கு மட்டும் 51 இடங்கள் ஒதுக்கப்பட்டு, தமிழ் அறிந்த பட்டதாரிகளுக்கு முன்னுரிமை அளிக்கவும் குறைந்தபட்சம் ஓராண்டு வங்கி அனுபவம் பெற்றிருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் pnb.bank.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் வரும் ஆகஸ்ட் 9-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

மற்றொரு புறம், யூனியன் பேங்க் ஆஃப் இந்தியாவில் மேலாளர், மூத்த மேலாளர் மற்றும் உதவிப் பொது மேலாளர் உள்ளிட்ட பல்வேறு நிர்வாகப் பதவிகளுக்கு 395 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. பணி அனுபவம் மற்றும் தகுதிக்கேற்ப ஆண்டிற்கு ரூ.21 லட்சம் முதல் ரூ. 47 லட்சம் வரை சம்பளம் நிர்ணயிக்கப்பட்டுள்ள இப்பணியிடங்களுக்கு, இளங்கலை, முதுகலை அல்லது பொறியியல் உள்ளிட்ட தொழிற்கல்வி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் கணினி வழித் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர் என்பதால், விருப்பமுள்ளவர்கள் ibpsreg.ibps.in இணையதளத்தில் வரும் ஆகஸ்ட் 10-ஆம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பித்து பயனடையலாம்.