BREAKING: “விஜய்யின் வெற்றி செல்லாது”… அதிர்ச்சியில் உறைந்த தமிழக அரசியல்… சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி நோட்டீஸ்….!

By Nanthini on ஆடி 7, 2026

Spread the love

பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு சட்டமன்றத் தொகுதிகளில் தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்களில் முரண்பாடுகள் இருப்பதாகக் கூறி, தமிழக முதல்வர் விஜய்யின் வெற்றியைச் செல்லாது என அறிவிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.

இந்த மனுக்களை விசாரித்த நீதிமன்றம், அவற்றில் உள்ள சில தொழில்நுட்பக் குறைபாடுகளை நிவர்த்தி செய்ய உத்தரவிட்டதோடு, இது தொடர்பாக மூன்று வாரங்களுக்குள் விரிவான பதிலளிக்குமாறு தமிழக முதல்வர் விஜய்க்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கடந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் ஒரே நேரத்தில் இரு தொகுதிகளில் போட்டியிட்டு அவர் வெற்றி பெற்ற நிலையில், இந்த சட்டப் போராட்டம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.