திருச்சி அரசு நிகழ்ச்சியில் தவெக எம்.எல்.ஏ மற்றும் காங்கிரஸ் எம்.பி இடையே குத்துவிளக்கு ஏற்றுவதில் ஏற்பட்ட சலசலப்பால் கூட்டணிக் கட்சிகளுக்குள் மோதல் வெடித்துள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பரவலாகப் பேசப்பட்ட நிலையில், தவெக – காங்கிரஸ் இடையே எந்தவித பனிப்போரும் இல்லை என்று காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் நிவேதித் ஆல்வா தெளிவுபடுத்தியுள்ளார். கூட்டணியில் எந்தப் பிரச்னையும் இல்லை என்றும், இடைத்தேர்தலில் எங்களது கூட்டணி மிகப்பெரிய வெற்றியைப் பெறும் என்றும் உறுதியளித்ததன் மூலம், நிலவி வந்த மோதல் வதந்திகளுக்கு அவர் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
