ஆய்வுகளின்படி, தினசரி 6 மணி நேரத்திற்கும் குறைவாக உறங்குபவர்களுக்கு ஜலதோஷம் பிடிப்பதற்கான வாய்ப்பு நான்கு மடங்கு அதிகமாக உள்ளது. தூக்கமின்மையால் உடலின் நோய் எதிர்ப்பு ஆற்றல் வலிமையிழப்பதே இதற்கு முக்கிய காரணமாகக் கருதப்படுகிறது. கலிஃபோர்னியா பல்கலைக்கழகம் மேற்கொண்ட ஆய்வில், போதிய ஓய்வின்றி இருப்பவர்களுக்கு வைரஸ் தொற்று எளிதில் ஏற்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே, சீரான உடல்நலத்தைப் பராமரிக்க ஆழ்ந்த உறக்கம் அவசியமாகிறது.
அதேபோல், நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து தொலைக்காட்சி பார்ப்பது நுரையீரலுக்கு உலை வைக்கும் செயலாகும். 5 மணி நேரத்திற்கும் மேலாகத் டிவி பார்ப்பவர்களுக்கு ‘பல்மனரி எம்பாலிஸம்’ எனும் நுரையீரல் ரத்தக்குழாய் அடைப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. கால்களில் உருவாகும் ரத்தக்கட்டு நுரையீரலுக்கு நகர்வதால் மூச்சுத்திணறல் மற்றும் நெஞ்சுவலி ஏற்பட்டு உயிருக்கே ஆபத்தாக முடியலாம். இதிலிருந்து தப்பிக்க, அவ்வப்போது எழுந்து நடப்பதையும் போதிய அளவு தண்ணீர் குடிப்பதையும் வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும்.
