பகீர்..! NOC ஊழல் விவகாரம்.. திமுகவைச் சிக்க வைத்த அந்த ஆவணங்கள்… அன்பில் மகேஷிற்கு நெருக்கமான 3 பேர்… அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு..!!

By Soundarya on ஆனி 19, 2026

Spread the love

கடந்த திமுக ஆட்சிக்காலத்தில் தனியார் பள்ளிகளுக்கு தடையில்லா சான்றிதழ் (NOC) வழங்கியதில் மிகப்பெரிய அளவில் முறைகேடுகள் நடந்துள்ளதாக வெளிவந்துள்ள செய்தி திமுக தலைமைக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனியார் பள்ளி நிர்வாகத்தினர் மூலமாகவே இந்த ஊழல் விவகாரம் தற்போது வெளிச்சத்திற்கு வந்து அம்பலமாகியுள்ளது. இந்த முறைகேடுகளுக்குப் பின்னால் முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷிற்கு (நெருக்கமான மூவர் குழு) இருப்பதாக நாளிதழ் ஒன்றில் செய்தி வெளியாகியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த முறைகேடு புகாரை சாதாரணமாக விட்டுவிடாமல் கையில் எடுக்க தற்போதைய தமிழக முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு அதிரடியாக முடிவெடுத்துள்ளதாகத் தெரிகிறது. இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டப்படியான தீவிர விசாரணை நடத்த அரசு திட்டமிட்டுள்ளது. தற்போதைய தவெக அரசின் இந்த அதிரடி நடவடிக்கை காரணமாக, இந்த ஊழல் புகார் விவகாரம் திமுக தலைமைக்கு மிகப்பெரிய அரசியல் நெருக்கடியையும் அதிர்ச்சியையும் கொடுத்துள்ளது.