தமிழகச் சட்டமன்றத் தேர்தல் களம் 100 டிகிரி வெயிலையும் தாண்டி அனல் பறக்கத் தொடங்கியுள்ள நிலையில், ‘மாற்றம்’ கொண்டு வருவேன் என முழங்கிய தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் தேர்தல் வியூகம் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. முதல்வர் ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி, சீமான் என மூத்த தலைவர்கள் முதல் ஜூனியர் தலைவர்கள் வரை வெயிலில் வேர்க்க விறுவிறுக்கத் தொகுதி தொகுதியாகச் சுழன்று வரும் வேளையில், விஜய்யின் பிரசார வேன் இன்னும் வேகம் எடுக்காதது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை உருவாக்கியுள்ளது. “எல்லாத் தலைவர்களும் ரோட்டில் இறங்கிப் பேசும்போது, விஜய் மட்டும் எங்கே?” என்ற நெட்டிசன்களின் கேள்வி, பொதுமக்களிடையே மட்டுமன்றி சொந்தக் கட்சி வேட்பாளர்களிடையே கூட ஒருவித சோர்வை ஏற்படுத்தியுள்ளது.
தலைவர் நேரில் வராத குறையைத் தீர்க்க, தவெக வேட்பாளர்கள் வினோதமான மற்றும் தொழில்நுட்ப ரீதியான பல “டெக்னிக்குகளை” கையில் எடுத்து வருகின்றனர். திருவெறும்பூர் தொகுதியில் போட்டியிடும் என்.எஸ். விஜி, அமைச்சர் அன்பில் மகேஷுக்கு எதிராகக் களமிறங்கியுள்ள நிலையில், தனது பிரசார வேனில் விஜய்யின் உருவ பொம்மையை ஏற்றிச் சென்று வாக்கு சேகரித்தது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. இதேபோல் கொளத்தூர் தொகுதியில் வி.எஸ். பாபு, விஜய்யைப் போலவே தோற்றமளிக்கும் டூப் நடிகரை வாகனத்தில் அழைத்துச் சென்றது சமூக வலைதளங்களில் நக்கல்களுக்கும் விமர்சனங்களுக்கும் உள்ளானது. இயக்குநர் சேரன் போன்ற திரையுலகப் பிரபலங்களே இந்த “டூப்” அரசியலை விமர்சிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
தொழில்நுட்பத்தில் ஒரு படி மேலே சென்ற கும்பகோணம் தொகுதி வேட்பாளர் வினோத், ‘ஹாலோகிராம்’ (Hologram) முறையைப் பயன்படுத்தி விஜய்யின் 3D பிம்பத்தைப் பிரசார வாகனத்தில் உலவ விட்டுள்ளார். இதைப் பார்க்கும் மக்கள் ஒரு நிமிடம் விஜய் நேரில் வந்துவிட்டாரோ என வியந்தாலும், அடுத்த நொடியே அது வெறும் பிம்பம் எனத் தெரிந்ததும் ஏமாற்றத்துடன் சிரிக்கிறார்கள். கட்-அவுட்களையும், பிம்பங்களையும் காட்டி ஓட்டு கேட்கும் வேட்பாளர்களின் நிலையைப் பார்த்து, “ரியல் விஜய் லீவ் எடுக்க, ரீல் விஜய் உடன் பிரசாரமா?” என இணையவாசிகள் விமர்சித்து வருகின்றனர்.
ஒரு கட்சியின் தலைவராக 234 தொகுதிகளுக்கும் குறுகிய காலத்தில் செல்வது சவாலானது என்றாலும், முக்கிய தொகுதிகளுக்குக் கூட வராமல் இருப்பது தவெக-வின் வாக்கு வங்கியைப் பாதிக்கலாம் என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். “திரையில் விஜய்யைப் பார்த்து விசில் அடிக்கலாம், ஆனால் நாட்டின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் தேர்தலில் மக்கள் தலைவரை நேரில் பார்க்கவே விரும்புகிறார்கள்” என்பதே கள யதார்த்தமாக உள்ளது. சீனியர் தலைவர்கள் ஓய்வில்லாமல் ஓடிக்கொண்டிருக்கும் போது, மாற்றத்தை விரும்புவதாகக் கூறும் விஜய், எப்போது முழுவீச்சில் களமிறங்குவார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள குருகுலத்தில் தங்கிப் படித்து வந்த 11 வயது சிறுவன் திவ்யான்ஷ் திவேதி, மிகக்…
திருமணம் முடிந்த முதலிரவு அன்று, தாய் தனது மருமகளுக்குப் பால் கொடுத்துவிட்டு "தூங்குங்கள்" என்று கூறிச் செல்ல முயன்றார். அப்போது…
தங்களது அன்புக்குரியவர்களின் மறைவுக்குப் பின், அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் ஒரு சகோதரி செய்துள்ள விசித்திரமான காரியம் இணையத்தில் நெகிழ்ச்சியையும்…
உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற கங்கோத்ரி கோயிலுக்கு வரும் பக்தர்கள் அனைவரும் கட்டாயமாக கோமியத்தைக் குடிக்க வேண்டும் என அந்த…
சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வினோத வீடியோவில், நண்டு ஒன்று பாம்பின் தலையை வேட்டையாடும் காட்சிகள் காண்போரை அதிரவைத்துள்ளன. …
டிசிஎஸ் (TCS) நிறுவனத்தில் பணியாற்றிய பெண் ஊழியர் ஒருவர், அங்குள்ள உயர் அதிகாரிகளால் கட்டாய மதமாற்ற முயற்சிக்கும், தனிப்பட்ட ரீதியான…