தமிழக சட்டசபைத் தேர்தல் தேதியைத் தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்ததைத் தொடர்ந்து, மாநிலம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன. இதன் ஒரு பகுதியாக, சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்களின் புகைப்படங்கள் மற்றும் அரசுத் திட்டங்களை விளக்கும் பேனர்கள் அனைத்தும் அதிரடியாக அகற்றப்பட்டுள்ளன.
மேலும் அரசு இயந்திரத்தைத் தேர்தல் ஆதாயத்திற்காகப் பயன்படுத்தக் கூடாது என்ற விதிமுறையின்படி, அரசு அலுவலகங்கள் மற்றும் பொது இடங்களில் உள்ள ஆளுங்கட்சி தொடர்பான அடையாளங்களை நீக்கும் பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகின்றன. தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, ஏப்ரல் 23-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று, மே 4-ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
இதனால் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளதால், அமைச்சர்கள் அரசு வாகனங்களைப் பயன்படுத்துவதற்கும், புதிய திட்டங்களை அறிவிப்பதற்கும் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மேலும், பொதுமக்கள் ஆவணங்களின்றி 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் பணம் கொண்டு செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. தேர்தல் அமைதியாகவும், நேர்மையாகவும் நடப்பதை உறுதி செய்யத் தேர்தல் ஆணையம் பல்வேறு கண்காணிப்புக் குழுக்களை அமைத்து தீவிரமாகக் கண்காணித்து வருகிறது.
கேரள மாநிலம் கொச்சி பொன்னுருன்னி பகுதியில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் வசிக்கும் பிரபல மலையாள நடிகை அதுல்யா சந்திரா, 41…
நீலகிரி மாவட்டம் பில்லூர்மட்டம் சடையன் கொம்பை பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமி ஒருவர் திடீரென காணாமல் போனதாக கடந்த…
டெல்லி அரசுப் பேருந்து ஓட்டுநரிடம் வழித்தடம் பற்றிக் கேட்ட பெண் ஒருவர், திடீரென ஓட்டுநருடன் தகராறில் ஈடுபட்டு அவரது காலரைப்…
சென்னையை அடுத்த கொளத்தூர் ஜி.கே.எம் காலனி பகுதியில் அமைந்துள்ள டாஸ்மாக் மதுபான கூடத்தில், அண்ணன் மற்றும் தங்கை இருவரும் மதுபோதையில்…
திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியில் கடந்த தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்த முன்னாள் அமைச்சர் கே.ஆர்.…
பெங்களூருவில் குடும்பத் தகராறு காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுக் கிடந்த சம்பவம் ஒட்டுமொத்த…