“விஜய்க்கு ஷாக் கொடுத்த முக்கிய புள்ளி”… நள்ளிரவு எடுத்த அதிரடி முடிவு…. காலையிலேயே வெளியிட்ட அறிவிப்பு…!

By Nanthini on வைகாசி 11, 2026

Spread the love

தவெக ஆட்சிக்கு ஆதரவு அளிக்கும் எண்ணம் தமக்கு இல்லை எனவும், டிடிவி தினகரனின் தலைமையிலேயே தொடர்ந்து பயணிக்கப் போவதாகவும் மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் டி.ஆர்.பி. ராஜா திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். சென்னையில் நேற்று இரவு நடைபெற்ற முக்கிய ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தற்போதைய அரசியல் சூழலில் கூட்டணியின் தலைமை எடுக்கும் முடிவுகளுக்கும், அவர்களின் அறிவுறுத்தல்களுக்கும் கட்டுப்பட்டுச் செயல்பட முடிவு செய்துள்ளதாகக் குறிப்பிட்டார்.

அதே சமயம், அதிமுகவில் மீண்டும் பிளவு ஏற்பட வாய்ப்புள்ளதா என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டதா என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, அது பற்றித் தமக்கு எதுவும் தெரியாது என சுருக்கமாகப் பதிலளித்து அங்கிருந்து புறப்பட்டார். இவரது இந்த அறிவிப்பு, அரசியல் வட்டாரத்தில் நிலவி வந்த பல்வேறு ஊகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அமைந்துள்ளது.