இனி யாரும் அதிமுக தலைவர்கள் பற்றி பேசக்கூடாது… திடீர் பல்ட்டி அடித்த திருமாவளவன்… இதுதான் காரணமா..?

Spread the love

வி.சி.க தலைவர் தொல் திருமாவளவன் வெளியிட்டுள்ள வீடியோவில், “ஆவண கொலைக்கு எதிராக சட்டம் இயற்ற வேண்டும்” என்பதை வலியுறுத்தி இன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், மேடையில் பேசவிருக்கும் நபர்கள், திருச்சியில் நடந்த மதசார்பின்மை காப்போம் பேரணியில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்து மட்டுமே பேச வேண்டும். நமது கருப்பொருளை மீறி வேறு எதையும் பேசக்கூடாது என்றார்.

நேற்றும், இன்றும் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா பற்றி நான் அவமதிப்பாக பேசி விட்டேன் என்ற கருத்துக்களை பரப்பி வருகிறார்கள். அதற்கு எதிர்வினை ஆற்றும் வகையில் இயக்கத் தோழர்கள், சமூக ஊடகங்களில் எதையும் பதிவிட வேண்டாம். அதேபோல் அதிமுகவை பற்றி எதுவும் பேசக்கூடாது. இதைப் பற்றி ஊடகங்கள் விளக்கத்தை எதிர்பார்த்தால், அதை நான் தரத் தயாராக உள்ளேன். இயக்கத் தோழர்கள் யாரும் அது குறித்து அவர்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டாம் என்றார்.

எந்த தலைவரையும் நான் குறைத்து மதிப்பிடுவதில்லை. கலைஞரின், நினைவேந்த நிகழ்வில் பேசும்பொழுது, கலைஞர் எத்தகைய சவால்களை எதிர்கொள்ள நேர்ந்தது என்று தான் விளக்கினேன். அது என்னுடைய தனிப்பட்ட கருத்து. அண்ணா உயிருடன் இருந்த காலத்திலேயே, அன்றைய காங்கிரஸ் அரசு, கலைஞரை தான் குறி வைத்து தாக்கினார். அண்ணாவையும் பெரியாரையும் குறிவைக்கவில்லை. புதுச்சேரியிலும், கோட்டூர் புறத்திலும் காங்கிஸ்சாரால் கலைஞர் தாக்கப்பட்டார், என்று தான் என் உரையில் குறிப்பிட்டிருந்தேன். அண்ணா மறைவுக்குப் பின், திமுக தலைமைப் பொறுப்பை அவர் ஏற்ற நிலையில், அவரை எதிர்த்து யார் யார் களம் இறங்கினார், அப்படியே அவருக்கு எதிராக அரசியல் இங்கே கட்டமைக்கப்பட்டது என்று தான் நான் விளக்கி பேசினேன்.

கலைஞரை விமர்சித்தவர்கள் தான் அதிகம். ஏனென்றால், அவர் பெரியாரீயத்தை பேசும் துணிச்சல் அவருக்கு உண்டு. அண்ணாவின் அரசியலை, மிக ஆழமாக பேசியவர் கலைஞர். ஆனால் நான் எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவை அவமதிக்கும் வகையில் பேசி விட்டதாக, கதை கட்ட பாக்கிறார்கள். எனவே, அவர்கள் எதையோ பேசி விட்டு போகட்டும். தமிழ்நாடு அரசு ஆணவக் கொலைகளை தடுப்பு சட்டம் இயற்ற வேண்டும் என தன்னுடைய உரையை முடித்தார்.

Srimathi

Recent Posts

“இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் சலுகை ரத்து” கைவிரித்த அமெரிக்கா… வெனிசுலாவை நோக்கி ஓட வேண்டிய கட்டாயம் – கச்சா எண்ணெய் சந்தையில் பெரும் பூகம்பம்..!!

கச்சா எண்ணெய் கொள்முதல் விவகாரத்தில் இந்தியாவுக்கு இனி சலுகைகள் வழங்கப்படாது என்று அமெரிக்கா அதிரடியாக அறிவித்துள்ளது. உக்ரைன் போர் மற்றும்…

4 minutes ago

“அம்மா தான் என் தலைவி.. ஆனா ஓட்டு விஜய்க்கு!”… தவெக வேட்பாளருக்காகக் களமிறங்கிய ராமராஜன்… அதிர்ச்சியில் ரத்தத்தின் ரத்தங்கள்…!!!

தமிழ் திரையுலகில் 80 மற்றும் 90-களில் உச்ச நட்சத்திரமாகத் திகழ்ந்த 'மக்கள் நாயகன்' ராமராஜன், அதிமுகவின் தீவிர விசுவாசியாகவும் திருச்செந்தூர்…

8 minutes ago

இந்திய ரிசர்வ் வங்கியில் இன்ஜினியர் வேலை… டிப்ளமோ/ டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.. மிஸ் பண்ணிடாதீங்க..!!

இந்திய ரிசர்வ் வங்கி (RBI), 2026-ஆம் ஆண்டிற்கான இளநிலை பொறியாளர் (Junior Engineer - Civil/Electrical) பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ…

9 minutes ago

சர்ச்சையில் சிக்கினார்..! “பாலியல் அத்துமீறல், போதைக் கலாச்சாரம்” முதல்வர் முன்னிலையிலேயே குண்டை தூக்கிப்போட்ட பிரேமலதா… அதிர்ச்சியில் ஸ்டாலின்..!!

தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் அத்துமீறல்கள் மற்றும் போதைக் கலாச்சாரம் அதிகரித்துள்ளதாகத் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.…

13 minutes ago

BREAKING : இந்தியாவின் தேடப்படும் பயங்கரவாதி அமீர் ஹம்சா லாகூரில் சுடப்பட்டார்… பெரும் பரபரப்பு..!!

பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தைபாவின் (LeT) இணை நிறுவனரும், ஹபீஸ் சயீதுக்கு அடுத்தபடியாக அந்த அமைப்பின் மிக முக்கியத் தலைவருமான அமீர்…

19 minutes ago

“என் வாழ்க்கையே நரமாகிடுச்சு” பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட தாயை 4-ம் மாடியிலிருந்து வீசிய மகன்… நெஞ்சை உலுக்கும் சம்பவம்..!!

பெங்களூருவில் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட தனது வயதான தாயை, நான்காவது மாடியில் இருந்து கீழே தள்ளி கொலை செய்த மகனின் கொடூரமான…

26 minutes ago