ஆசிரியர்களுக்கு குட் நியூஸ்.. டெட் எக்ஸாம் எழுத தேவையில்லை… தமிழக அரசின் மாஸ் உத்தரவு…!!

Spread the love

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் வகையில், ஆசிரியர் தகுதித் தேர்வு தொடர்பாக புதிய அரசிதழ் அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. கடந்த ஆண்டு உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில், ஆசிரியர்கள் பணியில் தொடரவும் பதவி உயர்வு பெறவும் டெட் தேர்வு கட்டாயம் என்றும், தேர்ச்சி பெறாதவர்கள் விருப்ப ஓய்வு பெறலாம் என்றும் கூறப்பட்டிருந்தது. இதனால் சுமார் 1.75 லட்சம் ஆசிரியர்கள் பாதிக்கப்படும் சூழல் உருவாகி, பெரும் கவலையடைந்திருந்த நிலையில், தமிழக அரசின் இந்த புதிய அறிவிப்பு அவர்களுக்கு மிகப்பெரிய நிம்மதியை அளித்துள்ளது.

தற்போது வெளியாகியுள்ள புதிய அரசிதழின்படி, உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் மற்றும் முதுகலை ஆசிரியர் ஆகிய பதவி உயர்வுகளுக்கு டெட் தேர்வு தேவையில்லை என்பது தெளிவாகியுள்ளது. இந்த இரண்டு முக்கிய பதவி உயர்வுகளுக்கும் டெட் தேர்வு கட்டாயமில்லை என்ற விபரம் அரசிதழில் குறிப்பிடப்பட்டுள்ளதால் ஆசிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதே நேரத்தில், PSHM, MSHM மற்றும் பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வுகளுக்கு டெட் தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம் என்றும் அந்த அரசிதழில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவற்றுடன் கூடுதலாக, பள்ளிக்கல்வித்துறையில் முதுகலை ஆசிரியர் பதவி உயர்வு வழங்கப்படும் போது, தொடக்கக் கல்வித்துறையில் பணியாற்றும் தகுதியான பட்டதாரி ஆசிரியர்களுக்கு 18 சதவீத இடங்கள் ஒதுக்கப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது. நீண்ட காலமாக பதவி உயர்வுக்காகக் காத்திருந்த ஆயிரக்கணக்கான ஆசிரியர்களின் குழப்பங்களுக்கு இந்த உத்தரவு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. தமிழக அரசின் இந்த அதிரடி நடவடிக்கை, ஆசிரியர்களின் பதவி உயர்வுக்கான பாதையை எளிதாக்கியுள்ளதால் ஆசிரியர் வட்டாரங்களில் இதற்குப் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

Swetha

Recent Posts

அதிர்ச்சி… தற்கொலை முடிவை மாற்றிய முதலை… ஆற்றில் குதித்த பெண்ணை… மரண பய காட்டி காப்பாற்றிய விசித்திர சம்பவம்…!!

கர்நாடக மாநிலம் உடுப்பி பகுதியைச் சேர்ந்த 38 வயதுப் பெண்ணான ரேகா, தனது கணவருடன் ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணமாக…

12 minutes ago

அம்மாடியோ… 10 வருஷத்துல இவ்வளவு மாறிடுச்சா?… இந்தியாவைப் பார்த்து வியந்த போலந்து பெண்… இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!

கடந்த 10 ஆண்டுகளாக இந்தியாவில் வசித்து வரும் நிலையில், 10 ஆண்டுகளுக்கு முன்பிருந்த இந்தியாவிற்கும் தற்போதைய நவீன இந்தியாவிற்கும் இடையே…

31 minutes ago

“அடேய் என்னடா பண்ணுறீங்க”?…. பிரபல மல்டிபிளெக்ஸில் கொடூரம்…. காலி கப்களை கழுவி ஜூஸ் கொடுத்த பகீர் வீடியோ….!

பெங்களூருவில் உள்ள ஃபோரம் மாலில் அமைந்துள்ள பிவிஆர் ஐநாக்ஸ் மல்டிபிளெக்ஸில் இயங்கி வந்த ஜூஸ் கடை, பயன்படுத்தப்பட்ட ஒருமுறை பயன்படுத்தும்…

37 minutes ago

“புலி இப்போது ‘பல் இழந்த புலி’ ஆனது எப்படி?… அமெரிக்க தேர்தலின் யாரும் எதிர்பாராத மறுபக்கம்”…. இனி டிரம்ப் ஒன்னுமே செய்ய முடியாதா?….!

அமெரிக்க இடைக்காலத் (மிட் டேர்ம்) தேர்தலில் ஆளும் குடியரசு கட்சி அடைந்த பெரும் தோல்வி, அதிபர் டொனால்ட் டிரம்பிற்கு அரசியல்…

50 minutes ago

“புர்ஜ் கலிஃபா உயரத்திற்கு ஒரு எஸ்கலேட்டர்… மேலே போனா கீழே இறங்க வழியில்லையா?”…. வெளிநாட்டுப் பெண்மணிக்கு நடந்த பகீர் அனுபவம்… வைரல் வீடியோ….!

உலகிலேயே மிகவும் விசித்திரமான மற்றும் சுவாரஸ்யமான நகரப் போக்குவரத்து அமைப்புகளில் ஒன்றாக ஹாங்காங்கில் உள்ள 'சென்ட்ரல் மிட் லெவல்ஸ் எஸ்கலேட்டர்'…

60 minutes ago

ரூ.4,730 கோடி ஆற்று மணல் கொள்ளை…. விடிய விடிய லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி ரெய்டு… சிக்கிய முக்கிய ஆவணங்கள்…. தமிழகத்தையே உலுக்கும் புதிய எஃப்.ஐ.ஆர்…!

தமிழகத்தில் அரசு ஆற்று மணல் குவாரிகளில் நடைபெற்ற மாபெரும் முறைகேடு தொடர்பாகப் பதிவு செய்யப்பட்டுள்ள புதிய முதல் தகவல் அறிக்கையின்…

1 மணத்தியாலம் ago