இனி இவங்களுக்கு எல்.பி.ஜி சிலிண்டர் கிடையாது… மத்திய அரசு போட்ட திடீர் தடை உத்தரவு… ஜூன் 30 தான் கடைசி நாள்…!

By Nanthini on ஆனி 3, 2026

Spread the love

மத்திய அரசின் புதிய உத்தரவின்படி, தங்கள் பகுதியில் குழாய் வழி இயற்கை எரிவாயு (PNG) உள்கட்டமைப்பு வசதி இருந்தும் அதற்கு மாறாத எல்.பி.ஜி (LPG) வாடிக்கையாளர்களுக்கு, வரும் ஜூன் 30-ம் தேதியுடன் அதற்கான 3 மாத காலக்கெடு முடிவடைகிறது. இந்த விதிமுறையை மீறி, பி.என்.ஜி வசதி இருந்தபோதிலும் புதிய இணைப்புக்கு மாறாமல் இருக்கும் குடும்பங்களுக்கான எல்.பி.ஜி சிலிண்டர் விநியோகம் முற்றிலும் நிறுத்தப்படும் என்று அந்த உத்தரவில் திட்டவட்டமாகக் கூறப்பட்டுள்ளது. நகர்ப்புறங்களில் எரிசக்தி விநியோகத்தை முறைப்படுத்தவும், சிலிண்டர் போக்குவரத்தைக் குறைத்து தடையற்ற எரிவாயுவை வழங்கவும் கொண்டு வரப்பட்டுள்ள இந்த அதிரடி மாற்றத்தால், பொதுமக்கள் காலக்கெடுவிற்குள் பி.என்.ஜி இணைப்புக்கு மாற வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர்.