திமுகவுடன் கூட்டணி இல்லை…. ஒரே போடாய் போட்ட கூட்டணி கட்சி… அதிர்ந்து போன அறிவாலயம்… தமிழக அரசியலில் திடீர் திருப்பம்..!

By Nanthini on ஆனி 21, 2026

Spread the love

சென்னை ராயபுரத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தமிழ்நாடு மாநில பொதுக்குழு கூட்டம், அதன் தேசிய தலைவர் கே.எம். காதர் மொகிதீன் தலைமையில் விறுவிறுப்பாக நடைபெற்றது. இக்கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து வந்த திமுக உடனான கூட்டணியை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இனி தொடராது என்று கட்சியின் பொதுக்குழுவில் அதிரடியாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக அவர் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

திமுக கூட்டணியில் இருந்து வெளியேறியுள்ள ஐயுஎம்எல், இனிவரும் காலங்களில் நடிகர் விஜய்யின் ‘தமிழக வெற்றிக் கழகம்’ கட்சியுடன் இணைந்து செயல்படும் என்று காதர் மொகிதீன் உறுதிபடத் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் ஜனாதிபதி ஆட்சி அமைந்துவிடக் கூடாது என்றும், அதன் மூலம் மறைமுகமாக பாஜகவின் ஆதிக்கம் வந்துவிடக் கூடாது என்கிற நோக்கிலுமே தாங்கள் தவெக கூட்டணியில் இணைந்ததாக அவர் விளக்கம் அளித்தார். மேலும், அகில இந்திய தலைமையுடன் கலந்தாலோசித்து, தவெகவின் ஷாஜகான் அமைச்சரவையில் ஐயுஎம்எல் சார்பில் இடம் பெற ஒப்புதல் அளிக்கப்பட்டிருப்பதாகவும், தவெக அரசு நல்லாட்சியை வழங்க முழு துணையாக நிற்போம் என்றும் அவர் கூறினார்.

   

தற்போது பெயர் சூட்டப்படாத இந்த தவெக கூட்டணியில் தாங்கள் உறுதியோடு இருப்பதாகவும், இன்றும் நாளையும் இந்த நிலைப்பாடு தொடரும் என்றும் அவர் தெளிவுபடுத்தினார். ஜனநாயகத்தில் வாக்களிப்பது இஸ்லாமிய மார்க்கத்தின் கடமைகளில் ஒன்று என்று தான் கூறியதை சுட்டிக்காட்டிய அவர், அது திமுகவிற்குத்தான் வாக்களிக்க வேண்டும் என்ற அர்த்தமல்ல என்று மறுப்பு தெரிவித்தார். இவற்றுடன், மேகதாது அணை கட்டப்பட்டால் தமிழகத்திற்கு காவிரி நீர் கிடைப்பது பாதிக்கப்படும் என்ற கவலையையும், சட்டமன்ற சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகள் மற்றும் கட்சி அலுவலக சோபா சர்ச்சை குறித்த சில விளக்கங்களையும் இந்த சந்திப்பின் போது அவர் பகிர்ந்து கொண்டார்.