தமிழகத்திற்கு வருகை தரும் அகில இந்திய காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் முதல்வருமான விஜய்யை சந்திக்கும் திட்டங்கள் எதுவுமில்லை என காங்கிரஸ் வட்டாரங்கள் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளன. அகில இந்திய காங்கிரஸ் கட்சி சார்பில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள மாவட்டத் தலைவர்களுக்கான 10 நாள் பயிற்சி முகாம் மாமல்லபுரத்தில் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், அதன் நிறைவு நாளான ஆகஸ்ட் 1-ஆம் தேதி ராகுல் காந்தி தமிழ்நாடு வருகிறார்.
இந்தச் சுற்றுப்பயணத்தின் போது அவர் பயிற்சி முகாமின் நிறைவு விழாவில் மட்டுமே பங்கேற்று, புதிய மாவட்டத் தலைவர்களிடையே உரையாற்றவுள்ளார் என்றும், தவெக தலைவர் விஜய்யை சந்திப்பதாக பரவி வரும் தகவல்களில் எந்தவித உண்மையும் இல்லை என்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் தெளிவுபடுத்தியுள்ளனர்.
