தமிழகத்தில் வீடுகளுக்கு தற்போது இரண்டு மாதங்களுக்கு 100 யூனிட் இலவசம் மின்சாரம் வழங்கப்பட்டு வருகின்றது. இந்த மின்சாரம் நிறுத்தப்படலாம் என்றும் மின்கட்டணம் வருகின்ற ஜூலை 1 முதல் உயர்த்தப்படும் என்றும் சமூக வலைதளங்களில் செய்தி வெளியாகியது. இதனைக் கண்டு மின்சார நுகர்வோர் அதிர்ச்சியில் இருந்த நிலையில் இது குறித்து மின்சாரத்துறை அமைச்சர் சிவசங்கர் விளக்கமளித்துள்ளார். அதில், சமூக வலைத்தளங்களிலும் சில செய்தி ஊடகங்களிலும் மின் கட்டணம் உயர்த்தப்பட உள்ளதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் பரவி வந்த நிலையில் அது தொடர்பாக கடந்த மாதம் 20ஆம் தேதி விரிவான விளக்கம் அளிக்கப்பட்டது.
தற்போது மீண்டும் அத்தகைய வதந்திகள் தொடர்ந்து பரவி வருவதால் அரசு இதனை தெளிவுபடுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. தற்போதைய சூழலில் மின்கட்டண உயர்வு குறித்து எந்தவித ஆணையும் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தால் வெளியிடப்படவில்லை. முதல்வரின் வழிகாட்டுதலின்படி ஒழுங்குமுறை ஆணையம் மின்கட்டணம் தொடர்பாக ஏதாவது ஆணை வழங்கினாலும் அதன் நடைமுறைப்படுத்தும் போது வீட்டு மின் நுகர்வோருக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் எந்த ஒரு மின்கட்டண உயர்வும் இருக்காது. தற்போது வழங்கப்படும் ஒரு யூனிட் இலவசம் மின்சாரம் உள்ளிட்ட அனைத்து சலுகைகளும் தொடர்ந்து வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
இரயில்வே டி.ஆர்.எம் அலுவலகத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்த 29 வயதான அஜய் குஷ்வாஹா, தேநீர் குடிப்பதற்காக வெளியே சென்றிருந்தபோது எதிர்பாராத…
புனேயின் சோம்வார் பேத் பகுதியில், 10 வயது சிறுவன் ஒருவன் அடுக்குமாடி குடியிருப்பின் மின்தூக்கியில் வைத்து மிகக் கொடூரமாகத் தாக்கப்படும்…
2026-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நடிகர் அர்ஜுன் தாஸின் கார் தேர்தல் பறக்கும் படையினரால் சோதனை செய்யப்பட்டு,…
பெங்களூருவைச் சேர்ந்த திலீப் என்ற 28 வயது ஜிம் பயிற்சியாளர், திருமணமான பெண்ணின் மிரட்டல் காரணமாக தற்கொலை செய்து கொண்ட…
ஏற்கனவே விதியால் உடைந்து போயிருந்த ஒரு மாற்றுத்திறனாளி முதியவரிடம், ஒரு சிறுமி வந்து பேசுகிறாள். "பாபா, உங்களுக்கு ஏதாவது வேண்டும்…
மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் பகுதியில் நடந்த இந்தச் சம்பவம், மின் பாதுகாப்பு குறித்த அலட்சியம் எவ்வளவு பெரிய உயிர் இழப்பை…