“எல்லாமே போச்சு”….! விஜய் ரசிகர்களுக்கு கடைசி நேரத்தில் விழுந்த பேரிடி….  லியோவுக்கு வந்த அடுத்த ஆப்பு…!!!!

By Mahalakshmi on ஐப்பசி 14, 2023

Spread the love

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய். இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் வருகிற அக்டோபர் 19ஆம் தேதி உலகம் எங்கும் வெளியாகியுள்ளது. இப்படத்திற்கான முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.

   

பொதுவாக தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக விளங்கும் விஜய், அஜித், ரஜினி, கமல் உள்ளிட்ட  நடிகர்களின் திரைப்படங்கள் அதிகாலை 4:00 மணி அல்லது ஐந்து மணிக்கு வெளியாவது வழக்கம். இதில் டிக்கெட்டின் விலை 5 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரை விற்பனை செய்வார்கள். இதனால் படத்தின் லாபம் அதிகரிக்கும். எத்தனை ஆயிரம் என்றாலும் விஜய், அஜித் ரசிகர்கள் அதனை விலை கொடுத்து வாங்கி விடுகிறார்கள்.

   

 

இதனால் அந்த சிறப்பு காட்சிகள் என்பது மிகவும் முக்கியமானதாக பார்க்கப்பட்டு வருகின்றது. அது மட்டும் இல்லாமல் ரசிகர்கள் முதல் நாள் முதல் காட்சியை பார்ப்பது என்பது அவர்களுக்கு மிகப்பெரிய ஆனந்தம். எனவே லியோ படத்திற்கும் அப்படி அதிகாலை சிறப்பு காட்சிக்கு அனுமதி கேட்டு தமிழக அரசுக்கு மனு வைத்திருந்தார்கள். இரண்டு நாட்களுக்கு முன்பு ஐந்து காட்சிகளுக்கு அனுமதி அளித்து அரசு தரப்பில் இருந்து அறிவிப்பு வெளியானது.

ஆனால் காலை நான்கு மணிக்கு காட்சிகள் இருக்கா இல்லையா என்பது குறித்து எந்த தகவலும் வெளியாகாமல் இருந்தது.  தற்போது ஒரு முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதில் முதல் காட்சி 9 மணிக்கு துவங்கி கடைசி காட்சி இரவு 1:30 மணிக்குள் முடித்துக் கொள்ள வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு தயாரிப்பாளர் தரப்புக்கும் விஜய் ரசிகர்களுக்கும் மிகப்பெரிய ஏமாற்றத்தை கொடுத்திருக்கின்றது.