பயிர்க்கடன் தள்ளுபடி கிடைக்காத விரக்தியில் நாகப்பட்டினம் மாவட்டம் பிரிஞ்சிமுனையைச் சேர்ந்த 67 வயது விவசாயி சோமு உயிரிழந்த சம்பவம், தமிழக முதல்வர் விஜய் தலைமையிலான அரசுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த சோமு தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் ₹85,000 பயிர்க்கடன் பெற்றிருந்த நிலையில், தமிழக அரசின் தள்ளுபடி சலுகை ₹75,000 வரையிலான கடன்களுக்கு மட்டுமே முழுமையாகப் பொருந்தும் என்பதால் அவருக்கு இந்த தள்ளுபடி கிடைக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இதனால் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளான அவர் மாரடைப்பால் உயிரிழந்ததாக கடைமடை விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் தெரிவித்துள்ளது. இச்சம்பவம் டெல்டா பகுதி விவசாயிகளிடையே பெரும் சோகத்தையும், கடன் தள்ளுபடிக்கான உச்சவரம்பை தளர்த்த வேண்டும் என்ற கோரிக்கையையும் வலுக்கச் செய்துள்ளது.
