கச்சா எண்ணெய் விலை உயர்வால் டீசல் விலையும் அதிகரித்து வரும் நிலையில், தமிழகத்தில் அரசுப் பேருந்து கட்டணங்கள் உயர்த்தப்படலாம் என்ற வதந்திகளுக்கு முதலமைச்சர் விஜய் அதிரடியாக முற்றுப்புள்ளி வைத்துள்ளார். சமீபத்தில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் பேசிய அவர், பொதுமக்கள் பாதிக்கப்படாத வகையில் பேருந்து கட்டணத்தை உயர்த்தாமல், மாற்று வழிகளில் போக்குவரத்துத் துறையின் வருவாயைப் பெருக்க முடிவு செய்துள்ளார்.
இதன்படி, அரசுப் பேருந்துகள் மற்றும் டிக்கெட்டுகள் பின்புறத்தில் விளம்பரங்களை வெளியிடுவதன் மூலம் வருமானத்தை அதிகரிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். எரிபொருள் விலை உயரும் சூழலிலும், மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு கட்டண உயர்வைத் தவிர்த்து எடுக்கப்பட்டுள்ள இந்த மாற்று வருவாய் திட்டம் பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
