திடீரென பின்வாங்கிய அமெரிக்கா?… “நவம்பர் 3 வரை காத்திருங்கள்!”… ஈரான் விவகாரத்தில் டிரம்ப் போட்ட ‘திடீர்’ பிரேக்… பதற்றத்தில் மத்திய கிழக்கு…!!

By Gayathri on ஐப்பசி 9, 2026

Spread the love

அமெரிக்காவில் நவம்பர் 3-ஆம் தேதி நடைபெறவுள்ள இடைக்காலத் தேர்தலுக்கு முன்னதாக, ஈரான் மீது புதிய ராணுவத் தாக்குதல் எதுவும் நடத்தப்படாது என்று அமெரிக்க அதிபர் டோனால்ட் டிரம்ப் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளார். இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் நீடித்து வரும் சூழலில், பேச்சுவார்த்தைகள் தொடர்வதாகவும், தற்போதைக்கு அமைதி வழியிலான அணுகுமுறைக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஈரானின் அணுசக்தி திட்டம் மற்றும் ஹார்முஸ் ஜலசந்தி வழியிலான கப்பல் போக்குவரத்துப் பாதுகாப்பு ஆகியவை குறித்து அமெரிக்கா தொடர்ந்து கடுமையான கண்காணிப்பையும் கட்டுப்பாடுகளையும் விதித்து வருகிறது. எந்தச் சூழ்நிலையிலும் ஈரானை அணு ஆயுதம் பெற அனுமதிக்க மாட்டோம் என்று திட்டவட்டமாகத் தெரிவித்த டிரம்ப், அதேவேளையில் தற்போதைய தேர்தல் காலத்தில் ஒரு பெரிய ராணுவ மோதலைத் தவிர்ப்பதில் உறுதியாக இருக்கிறார்.

   

தாக்குதல் இருக்காது என்ற டிரம்பின் இந்த அறிவிப்பு, சர்வதேச எரிசக்தி சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதுடன், உலகளாவிய கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்டிருந்த கடும் உயர்வை சற்றே தணிக்க உதவியுள்ளது. இருப்பினும், ஈரானிய துறைமுகங்கள் மீதான பொருளாதாரத் தடைகளும், பிராந்திய அளவிலான அரசியல் நிச்சயமற்ற தன்மையும் தொடர்ந்து நீடிப்பதால், மத்திய கிழக்கு விவகாரங்களில் அடுத்தகட்ட நகர்வுகள் உன்னிப்பாகக் கவனிக்கப்பட்டு வருகின்றன.