முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்து, அமைச்சரவை கலைப்பு தீர்மானத்தை ஆளுநரிடம் நிதிஷ்குமார் வழங்கினார். நாளை நடைபெற இருக்கும் ஐக்கிய ஜனதா தளம் எம்எல்ஏக்கள் கூட்டத்தில் நிதிஷ்குமார் சட்டமன்ற குழு தலைவராக தேர்வாகிறார். அதன் பிறகு பாஜக உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் ஆதரவுடன் மீண்டும் நவம்பர் 20-ம் தேதி முதல்வர் பதவியை ஏற்பார் என கூறப்படுகிறது.
