அரசு பள்ளிகளுக்கு மூடுவிழாவா?…. கடந்த 10 ஆண்டுகளில் 94,000 பள்ளிகள் காலி…. நிதி ஆயோக் வெளியிட்ட பகீர் அறிக்கை….!

By SATHISH R on ஆடி 10, 2026

Spread the love

நாடு முழுவதும் கடந்த 10 ஆண்டுகளில் நாளொன்றுக்கு சராசரியாக 25 பள்ளிகள் வீதம் மொத்தம் 94,000 பள்ளிகள் மூடப்பட்டிருப்பதாக நிதி ஆயோக் வெளியிட்டுள்ள அறிக்கை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதே காலகட்டத்தில் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கையும் 2.26 கோடியாகக் குறைந்துள்ளது. நாட்டின் அரசு கல்வி முறை கடுமையான நெருக்கடியில் இருப்பதை எச்சரிக்கும் விதமாக அமைந்துள்ளது.

குறைந்த மாணவர் சேர்க்கை காரணமாகப் பள்ளிகளை ஒன்றிணைப்பது (School Merging) மற்றும் ஒட்டுமொத்தப் பிறப்பு விகிதம் குறைந்து வருவதுமே இந்த வீழ்ச்சிக்கு முதன்மைக் காரணங்களாகக் கூறப்பட்டாலும், இது விளிம்புநிலை மாணவர்களின் கல்வி வாய்ப்புகளைப் பாதிக்குமோ என்ற கவலையையும் சேர்த்தே உருவாக்கியுள்ளது.