எல்லாத்துக்கும் காரணம் சுந்தர்.சி சொன்ன அந்த ஒரு வார்த்தை தான்.. உண்மையை போட்டுடைத்த மகாராஜா பட இயக்குனர்..!!

By Priya Ram on ஜூலை 27, 2024

Spread the love

இயக்குனர் நித்திலன் சுவாமிநாதன் கடந்த 2007 ஆம் ஆண்டு ரிலீசான குரங்கு பொம்மை திரைப்படத்தின் மூலம் இயக்குனராக தனது பயணத்தை ஆரம்பித்தார். அந்தப் படத்தில் விதார்த், பாரதிராஜா, டெல்னா டேவிஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தனர். இந்த படம் மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது.

   

தற்போது விஜய் சேதுபதி வைத்து நித்திலன் சுவாமிநாதன் மகாராஜா படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் அனுராக் காஷ்யப், மம்தா மோகன்தாஸ், நடராஜ், சுப்ரமணியம், சிங்கம்புலி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படம் சூப்பர் ஹிட் ஆனது. சமீபத்தில் நித்திலன் சுவாமிநாதன் சித்ரா லட்சுமணன் உடனான பேட்டியில் கலந்து கொண்டார்.

   

 

அப்போது அவர் கூறியதாவது, நான் நாளைய இயக்குனர் நிகழ்ச்சியில் கலந்துகிட்டேன். அதுல புதிர் என்று ஒரு ஷார்ட் பிலிம் பண்ணேன். ஒரு வார்த்தை கொல்லும். ஒரு வார்த்தை வெல்லும் அப்படிங்கறது அங்க தான் நடந்துச்சு. அப்போ எனக்கு இருந்த அனுபவத்துக்கு அந்த ஷார்ட் பிலிம் தான் எடுக்க முடிஞ்சது. அப்போது சுந்தர் சி சார் என் ஷார்ட் பிலிம் பாத்துட்டு குரோசாவா படம் மாதிரி இருக்குப்பா உன் படம் அப்படின்னு சொன்னாரு.

வளரும் பையனாச்சேன்னு நினைச்சு அவர் அப்படி சொல்லிட்டாரு. அவர் சொன்ன வார்த்தை தான் எனக்கு எனர்ஜி கொடுத்துச்சி. நம்ம சாதிச்சிடுவோம்னு எனக்கு ஒரு நம்பிக்கை கொடுத்தது என ஓப்பனாக பேசியுள்ளார். குரோசாவா உலக புகழ் பெற்ற ஜப்பானிய திரைப்பட இயக்குனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.