Connect with us

‘படிப்பு ரொம்ப முக்கியம்’… வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் குழந்தைகளை சந்தித்து அறந்தாங்கி நிஷா செய்த செயல்..  மனதார பாராட்டும் ரசிகர்கள்..

CINEMA

‘படிப்பு ரொம்ப முக்கியம்’… வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் குழந்தைகளை சந்தித்து அறந்தாங்கி நிஷா செய்த செயல்..  மனதார பாராட்டும் ரசிகர்கள்..

 

சென்னையில் மிக்ஜாம் புயல் காரணமாக வரலாறு காணாத கனமழை பெய்துள்ளது. இடைவிடாது கொட்டிய இந்த கனமழையால் சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் தண்ணீர் தேங்கி குளம்போல காட்சியளிக்கிறது. இதனால், ஆயிரக்கணக்கான மக்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாமலும், உணவு, குடிநீர் கிடைக்காமலும் தவித்து வருகின்றனர். மீட்பு பணிகள் நடைபெற்று வந்தாலும், புறநகரிலுள்ள பல்வேறு பகுதிகளில் இன்னும், அரசின் உதவி சென்றடையவில்லை. 

   

இந்நிலையில், தன்னார்வலர்களும், பல்வேறு தொண்டு நிறுவனங்களைச் சார்ந்தவர்களும் மீட்புப் பணியில் ஈடுபட்டு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி வருகின்றனர். இவர்கள் மட்டுமின்றி சினிமா பிரபலங்களும் உதவி செய்து வருகின்றனர். இவர்களில் முக்கியமானவர் அறந்தாங்கி நிஷா.  வெள்ளத்தில் தத்தளித்த மக்களுக்கு உணவுப்பொருட்களை தனது காரில் கொண்டு சென்று கொடுத்தார். அதோடு மட்டுமின்றி பல்வேறு உதவிகளையும் செய்தார்.

இவர் சென்னை மக்களுக்காக தனது சொந்த மகள் மகள் ஸபா டைபாய்டு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு ICU- வில் இருந்த போது கூட அம்மாவிடம் விட்டு விட்டு மழை வெள்ளத்தில் தவிப்பவர்களுக்கு உதவி செய்தார். தற்பொழுது இவர் , வெள்ளத்தில் தங்களது புத்தகங்கள் , school bag போன்றவற்றை இழந்த குழந்தைகளுக்கு நல்ல அறிவுரை வழங்கி உதவுவதாகவும் கூறி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள் அவரின் இந்த செயலை மனதார பாராட்டி வருகின்றனர். இதோ அந்த வீடியோ…

 

View this post on Instagram

 

A post shared by Aranthai Nisha (@aranthainisha)

Continue Reading
To Top