சென்னை கூடுவாஞ்சேரியில் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ஹயாத்துன் நிஷா என்ற பெண் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட வழக்கில், அவரது காதலன் மணிக் உத்தீன் லஸ்கர் மற்றும் அவரது மனைவி பகவதி மாஜி ஆகியோரைத் தனிப்படை போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். சட்டவிரோத உறவு காரணமாக ஏற்பட்ட தகராறில், நிஷாவுக்கு உணவில் விஷம் வைத்துக் கொன்றுள்ளனர். பின்னர் சடலத்தை வெளியே எடுத்துச் செல்ல முடியாததால், யூடியூப் உதவியுடன் உடலை பல துண்டுகளாக வெட்டி, வினிகர் மற்றும் ரசாயனங்களைப் பயன்படுத்தி பிரியாணி பாத்திரத்திலும் பிளாஸ்டிக் பைகளிலும் அடைத்துள்ளனர். தொடர்ந்து எலும்புகளை டிராலி பெட்டியில் திணித்து, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் கழிவறை அருகே வீசிவிட்டு தப்பியுள்ளனர்.
கொலை சம்பவத்திற்குப் பிறகு தம்பதியினர் இருவரும் நக்சல் ஆதிக்கம் நிறைந்த மணிப்பூர் மாநிலத்தின் ஜிரிபாம் பகுதிக்குத் தப்பிச் சென்று பதுங்கினர். குற்றவாளிகளைப் பிடிக்கக் கூடுவாஞ்சேரி தனிப்படை போலீசார் மணிப்பூர் விரைந்தனர். எனினும், அப் பகுதி பாதுகாப்பு அற்றது என்பதால், ஏ.கே.47 துப்பாக்கி ஏந்திய மணிப்பூர் அதிரடிப் படையினரின் உதவியை நாடினர். போலீசார் பதுங்கியிருந்த இடத்தைச் சூழ்ந்தபோது, மணிக் உத்தீன் தப்பியோட முயன்றதால் சூழல் மேலும் சிக்கலானது.
தனிப்படை போலீசார் நேரடியாக மணிக் உத்தீனைத் துரத்தாமல் ஒரு தந்திரமான வியூகத்தைக் கையாண்டனர். உள்ளூர் நபர் ஒருவர் மூலம் மணிக் உத்தீனைத் தொடர்புகொண்டு, பைக்கில் தப்பிச் செல்லுமாறு நம்பவைத்துப் பேச வைத்தனர். அந்த தகவலை நம்பிய மணிக் உத்தீன் மோட்டார் சைக்கிளில் புறப்படவே, அவரது பைக்கின் பதிவு எண் மற்றும் அவர் பயணித்த பாதையைத் துல்லியமாகக் கண்காணித்து, மணிப்பூர் காவல்துறையின் உதவியுடன் சரியான இடத்தில் அவரைச் சுற்றி வளைத்துக் கைது செய்தனர்.
கைதான மணிக் உத்தீனிடம் நடத்திய தீவிர விசாரணையின் அடிப்படையில், பதுங்கியிருந்த அவரது மனைவி பகவதி மாஜியையும் போலீசார் கைது செய்து இருவரையும் சென்னைக்கு அழைத்து வந்தனர். கொல நடந்த கூடுவாஞ்சேரி வீடு மற்றும் சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு அழைத்துச் சென்று குற்றத்தை நடித்துக் காட்டச் செய்த போலீசார், கொலைக்குப் பயன்படுத்திய ஆயுதங்களைப் பறிமுதல் செய்தனர். தமிழகத்தை உலுக்கிய இக் கொடூர வழக்கின் குற்றவாளிகளைத் தொலைதூர மணிப்பூரில் வைத்துத் திறம்படப் பிடித்த சென்னை தனிப்படை போலீசாரின் இந்த ஸ்கெட்ச் பெரும் பாராட்டுகளைப் பெற்றுள்ளது.
சூரத்தில் தனது வீட்டிற்கு அருகில் விளையாடிக் கொண்டிருந்த ஒரு சிறுமி, ஈகோ வேன் மோதியதில் வாகனத்தின் அடியில் விழுந்தாள். எதிர்பாராத…
பார்ப்பேட்டா பகுதியில் காதலுக்காகத் துணிச்சலான முடிவெடுத்த ஒரு பெண்ணின் கதை தற்போது பரவலாகப் பேசப்பட்டு வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாகக்…
அம்ரோஹா மாவட்டத்தில் உள்ள நௌகவான் சாதத் காவல் நிலையப் பகுதியில் விசித்திரமான ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. அங்குள்ள ஒரு இளைஞனும்…
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஆ.சங்கம்பாளையத்தைச் சேர்ந்த 19 வயது மாணவி, பொள்ளாச்சி அரசு கலைக் கல்லூரியில் பிகாம்…
நதியாட் ரயில் நிலையத்தில் நகர்ந்து கொண்டிருந்த யஷ்வந்த்பூர்-பிகானீர் விரைவு ரயிலில் ஏறும் போது வழுக்கி விழுந்த ஒரு பயணியை ஆர்.பி.எஃப்…
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள காளப்பன்பட்டியைச் சேர்ந்த பாண்டித்துரை (35) என்பவர், மதுபோதையில் தனது உறவினரான ராஜேஷ் கண்ணன்…