ஆளே அடையாளம் தெரியாமல் மாறிய அறந்தாங்கி நிஷா… 50 நாட்களில் நடந்த சம்பவம்..!

By Soundarya on மார்கழி 22, 2024

Spread the love

சின்னத்திரையில் பெண் காமெடியார்கள் இருப்பது என்பது மிகவும் பெரிய விஷயம். அப்படி சின்னத்திரையில் நுழைந்து குறுகிய காலத்திலேயே மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர்களில் ஒருவர் அறந்தாங்கி நிஷா. காமெடி என்றாலே ஆண்கள் தான் என்று சொல்லிக் கொண்டிருந்த நிலையில் பெண்களாலும் காமெடி செய்ய முடியும் என்று நிரூபித்து காட்டியவர்.

   

அறந்தாங்கி நிஷா கடந்த 2015-ஆம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார்.  அதன்பிறகு நிஷாவுக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் வந்தது. கடந்த 2018-ஆம் ஆண்டு ரிலீசான மாரி 2 திரைப்படத்தில் அட்டு ஆனந்தி கதாபாத்திரத்தில் அறந்தாங்கி நிஷா நடித்துள்ளார்.

   

 

இதனை தொடர்ந்து இரும்புத்திரை, கோலமாவு கோகிலா, சீமராஜா, திருச்சிற்றம்பலம் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் அறந்தாங்கி நிஷா நடித்துள்ளார்.இது மட்டும் இல்லாமல் மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை சீசன் 1, குக் வித் கோமாளி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளை அறந்தாங்கி நிஷா தொகுத்து வழங்கியுள்ளார்.

பிக் பாஸ் சீசன் 4 அறந்தாங்கி நிஷா போட்டியாளராக பங்கேற்று 70 நாள் அங்கேயே இருந்தார். இவரது நகைச்சுவைக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். இந்த நிலையில் சினிமாவில் நுழையும் போது ஓரளவிற்கு குண்டாக இருந்த அறந்தாங்கி நிஷா இடையில் அதிக உடல் எடை ஏறி காணப்பட்டார். தற்போது அவர் கடுமையான டயட் பிறகு 50 நாட்களில் 14 கிலோ வரை உடல் எடையை குறைத்துள்ளாராம்.