ஐயோ பாவம்… கல்யாணமான 6 மாசத்துல இப்படியா ஆகணும்?… முதியவரைக் காப்பாற்றச் சென்று பலியான புதுமாப்பிள்ளை… நெஞ்சை பதறவைக்கும் கோர சம்பவம்…!

By Swetha on ஆவணி 14, 2026

Spread the love

தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகே உள்ள கோபுராஜபுரம் ரயில்வே கேட்டில், உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ராகுல் (30) என்பவர் கேட் கீப்பராகப் பணியாற்றி வந்தார். தெற்கு ரயில்வேயில் பணி கிடைத்ததால் சொந்த ஊரை விட்டு இங்கு தங்கிப் பணியாற்றி வந்த இவருக்கு, கடந்த 6 மாதங்களுக்கு முன்புதான் திருமணம் நடைபெற்றது. வழக்கம்போல நேற்று இரவு 11.30 மணியளவில் நாகர்கோவில் – தாம்பரம் அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரயில் வரும்போது அவர் பணியில் இருந்தார்.

அப்போது 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் தண்டவாளத்தைக் கடக்க முயன்றார். அவர் தற்கொலைக்கு முயல்வதைக் கண்ட ராகுல், தன் கண்முன்னே ஒரு உயிர் போவதைத் தடுக்க ஓடிச் சென்று அவரைக் காப்பாற்ற முயன்றார். ஆனால் எதிர்பாராதவிதமாக, கண்ணிமைக்கும் நேரத்தில் ரயில் இருவர் மீதும் பயங்கரமாக மோதியதில், ராகுலும் அந்த முதியவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

   

தகவலறிந்து வந்த ரயில்வே போலீசார் இருவரின் உடல்களையும் மீட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனைக்குக் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இறந்த முதியவர் யார், அவர் எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது குறித்தும், இந்தச் சம்பவம் குறித்தும் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணம் முடிந்து 6 மாதங்களே ஆன நிலையில், மற்றவரைக் காப்பாற்றச் சென்று உயிரிழந்த ராகுலின் செயல் அப்பகுதியிலும், சக ஊழியர்கள் மத்தியிலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.