கடவுளின் படைப்பில் ஆச்சரியமானது குழந்தையின் பிறப்பு. குழந்தை பிறப்பது முதல் வளர வளர உடல் மாற்றங்கள் பலவும் ஆச்சரியம் அளிக்க கூடியது. ஒரு தாய் 10 மாதம் கருவை வயிற்றில் சுமந்து பல போராட்டங்களுக்கு பின்னர் தனது குழந்தையை பெற்றெடுக்கிறாள். குழந்தை பிறக்கும்போது அந்த பிரசவ வலி என்பது மறுபிறவி எடுப்பது போல். குழந்தை பிறந்ததும் தனது பிள்ளையின் முகத்தை பார்த்தல் அந்த வலியெல்லாம் உடனே பறந்து போய் விடும்.
View this post on Instagram
இந்நிலையில் ஒரு வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. பிறந்த உடனேயே ஒரு குழந்தை தனது தாயை முத்தமிடும் அழகான ஆச்சர்யம் நிறைந்த வீடியோ வைரலாகியுள்ளது. இது ஒரு தாய்க்கும் குழந்தைக்கும் இடையிலான தூய பிணைப்பைக் காட்டுகிறது. பிறந்த குழந்தை அம்மாவை முத்தமிடும் அரிய காட்சி ஆச்சர்யத்தில் மூழ்கடித்துள்ளது.
