போடு ரகிட ரகிட… இன்று முதல் Gpay, phonepeவில் புதிய மாற்றம்…. சூப்பர் அறிவிப்பு….!

By Nanthini on கார்த்திகை 3, 2025

Spread the love

இன்றைய காலகட்டத்தில் மக்கள் மத்தியில் ஆன்லைன் பணப்பரிவர்த்தனை என்பது அதிகமாகவே உள்ளது. அப்படி ஆன்லைன் பணப்பரிவர்த்தனையை மேற்கொள்பவர்கள் google pay, போன் பே போன்ற UPI செயலிகளை பயன்படுத்தி வருகின்றனர்.  இந்நிலையில் google pay, போன் பே உள்ளிட்ட UPI சேவையில் வெற்றிகரமான மற்றும் தோல்வி/ரத்தான பரிவர்த்தனைகள் ஆகியவற்றை ஒரே செட்டில்மெண்ட் சுழற்சியில் கையாள்வதை நவம்பர் 3 இன்று முதல் NPCI நிறுத்தியுள்ளது.

இதற்கு மாறாக இரு வித பரிவர்த்தனைகளும் தனித்தனி சுழற்சிகளில் கையாளப்படும். இதனால் உங்களின் தினசரி UPI பணப்பரிவர்த்தனை வேகமாகும். தோல்வியடைந்த ட்ரான்ஷாக்ஷனுக்கு பணம் திரும்ப கிடைப்பதில் இனி தாமதம் ஏற்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.