கலைஞர் உரிமை தொகை என்பது கடந்த ஆண்டு முதல் தமிழக அரசு பெண்களுக்கு மாதம் ரூ 1000 உதவித்தொகை வழங்கி வருகிறது. இது பலருக்கு நன்மையை அளித்தாலும் பலர் இந்த திட்டத்தில் நன்மை பெற முடியவில்லை. தற்போது இது பற்றிய ஒரு அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

தமிழக அரசு தொடர்ந்து வழங்கி வரும் கலைஞர் உரிமை தொகை யாருக்கெல்லாம் கிடைக்கவில்லையோ அவர்களெல்லாம் மீண்டும் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. முன்னமே விண்ணப்பித்து உங்களின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டிருந்தால் மீண்டும் அந்த பெண்கள் கலைஞர் உரிமை தொகையை கோரி மீண்டும் விண்ணப்பிக்கலாம்.
ஆனால் உங்களது விண்ணப்பம் எதனால் நிராகரிக்கப்பட்டது என்பதை தெரிந்து அந்த தவறுகளை சரி செய்து உரிய ஆவணங்களுடன் மீண்டும் விண்ணப்பிக்கலாம். அதேபோல் இந்த கலைஞர் உரிமை தொகைக்கு இதுவரை விண்ணப்பிக்காதவர்களும் புதிதாக விண்ணப்பிக்கலாம். புதிதாக விண்ணப்பிப்பவர்கள் இந்த கலைஞர் உரிமை தொகைக்காண விதிமுறைகளை பின்பற்ற வேண்டும்.

கலைஞர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பிக்கும் பெண்களுக்கு 21 வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும். குடும்பவருமானம் ஆண்டுக்கு 2.5 லட்சம் ரூபாய்க்கு மிகாமல் இருக்க வேண்டும். நன்செய் நிலங்கள் ஐந்து ஏக்கர் புன்செய் நிலங்கள் 10 ஏக்கருக்கு மிகாமல் இருக்க வேண்டும். கார் உள்ளிட்ட நான்கு சக்கர வாகனங்கள் வைத்திருக்கக் கூடாது. வருமான வரி செலுத்துபவராக இருக்கக் கூடாது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
