TVS நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட என்டராக் 150 மாடல், இந்திய சந்தையில் ரூ. 1.19 (எக்ஸ்-ஷோரூம்) லட்சத்திற்கு அறிமுகமானது. இது இரு வேரியன்ட் களில் கிடைக்கிறது. இதன் டாப்-எண்ட் மாடலில், கலர் டிஎஃப்டி டிஸ்ப்ளே போன்ற அம்சங்கள் உள்ளன. அந்த வேரியண்ட் விலை ரூ. 1.29 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்).
இந்த ஸ்கூட்டர் TVS என்டராக் 125 ஐ அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டாலும், ஸ்டைலிங்கில் தொடங்கி, மிகவும் புதியதாகவும் தனித்துவமாகவும் அமைந்துள்ளது. இதில் எல்இடி, டிஆர்எல்-கள் & இன்டிகேட்டர்கள், குவாட் LED ப்ரொஜெக்டர் ஹெட்லைட்கள் & ஆக்ரோஷமாக வடிவமைக்கப்பட்ட பாடி பேனல்கள் உள்ளன. டெயில் லைட்கள், ஸ்கூட்டருக்கு ஒரு தனித்துவமான தோற்றத்தை சேர்க்கும் பிளவு அமைப்பைக் கொண்டுள்ளன.
ஸ்கூட்டரில் என்டார்க் 125-இன் அதே சேசிஸ் உள்ளது. இரு முனைகளிலும் 12 இன்ச் சக்கரங்கள் உள்ளன. முன்பக்கத்தில் டிஸ்க் பிரேக் & பின்புறத்தில் டிரம் யூனிட் வழங்கப்படுகிறது. இத்துடன் ஒற்றை-சேனல் ABS ஸ்டான்டர்டு வழங்கப்படுகிறது. மேலும் 149.7cc, ஏர்-கூல்டு, 3-வால்வுகள் கொண்ட ஒற்றை-சிலிண்டர் எஞ்சின் வழங்கப்பட்டுள்ளது. இது யூனிட் 13bhp பவர் மற்றும் 14.2Nm டார்க் வெளிப்படுத்துகிறது. இந்த எஞ்சின் CVT யூனிட் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்கூட்டர் மணிக்கு 104 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும். இதில் முதன்முறையாக அட்ஜஸ்ட் செய்யக்கூடிய பிரேக் லீவர்களையும் கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பதிவுகள் தொடங்கியுள்ள நிலையில், விரைவில் டெலிவரிகளும் தொடங்கும்.
டேராடூனைச் சேர்ந்த லலிதா சௌத்ரி என்ற தாய், சாலை விபத்தில் உயிரிழந்த தனது ஒரே மகனின் மரணத்திற்கு நீதி கேட்டு…
2026-ம் ஆண்டிற்கான ஜே.இ.இ (JEE) மெயின் தேர்வு முடிவுகளைத் தேசிய தேர்வுகள் முகமை தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. ஏப்ரல் 2…
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், பொன்னேரி மற்றும் கும்மிடிப்பூண்டி தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து பஞ்செட்டி பகுதியில் மேற்கொண்ட சாலைப்…
தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி வரும் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், தமிழக வெற்றிக்…
தமிழக சட்டமன்றத் தேர்தல் இன்னும் இரண்டு நாட்களில் நடைபெறவுள்ள நிலையில், அரசியல் களம் உச்சக்கட்டப் பரபரப்பை எட்டியுள்ளது. குறிப்பாக, நடிகர்…
திருச்சிராப்பள்ளி சினிமா ரசிகர்களுக்கு ஒரு பிரம்மாண்டமான நற்செய்தி! தமிழகத்தின் முதல் டால்பி சினிமா (Dolby Cinema) தொழில்நுட்பம் திருச்சியில் உள்ள…