செந்தில் பாலாஜிக்கு வந்த புது சிக்கல்.. மீண்டும் கைது?…. காலையிலேயே பரபரப்பு…!

By Nanthini on ஆனி 6, 2026

Spread the love

கடந்த 2011 – 16ஆம் ஆண்டு காலத்தில் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணம் பெற்றதாக எழுந்த புகாரின் அடிப்படையில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது அமலாக்கத்துறை (ED) வழக்குப்பதிவு செய்து சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க தமிழக ஆளுநரிடம் தற்போதைய தமிழக அரசு அனுமதி கோரியுள்ளது.

இந்த விவகாரத்தில் ஆளுநர் ஒப்புதல் அளிக்கும் பட்சத்தில், செந்தில் பாலாஜிக்கு மீண்டும் சம்மன் அனுப்பி விசாரணையைத் தீவிரப்படுத்த அமலாக்கத்துறை திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே இதே பணமோசடி வழக்கில் கடந்த 2023 ஜூன் 14 அன்று கைது செய்யப்பட்டு நீண்ட காலம் சிறையில் இருந்த அவர், தற்போது மீண்டும் கைது செய்யப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் இருப்பதாக அரசியல் மற்றும் சட்ட வட்டாரங்களில் பரவலாகக் கூறப்படுகிறது.