வீட்டு வாடகைதாரர்களே உஷார்… பெங்களூரில் நடக்கும் புதுவித மோசடி… அலர்டா இல்லனா மொத்த பணமும் போச்சு ..!

By Nanthini on ஐப்பசி 25, 2025

Spread the love

பெங்களூரில் ரியல் எஸ்டேட் மற்றும் வீட்டு வாடகை சந்தை என்பது மிகவும் பிசியாக இருக்கக்கூடிய ஒரு துறையாக உள்ளது. ஐடி நிறுவனங்களின் வளர்ச்சிக்கு ஏற்ப பெங்களூரில் வாடகை வீடுகளுக்கான தேவையும் அதிகரித்துள்ளது. வாடகை வீடுகளுக்கான டிமாண்ட் அதிகரித்துள்ளதால் பெங்களூரில் பிரதான பகுதிகளில் வீடு வாடகைகள் மிக அதிக அளவில் வசூல் செய்யப்படுகின்றன. குறைந்தபட்சம் ஒரு படுக்கையறை கொண்ட வீடு வேண்டுமானால் 30 ஆயிரம் ரூபாய் முதல் வாடகை வசூலிக்கப்படுகிறது. தவறின் பிரதான பகுதிகளில் வீடு தேவை என்றால் இரண்டு படுக்கையறை கொண்ட வீட்டுக்கு 50,000 ரூபாய்க்கு மேல் வாடகையும் 10 மாத வாடகையை செக்யூரிட்டி டெபாசிட் தொகையாகவும் வீட்டு உரிமையாளர்கள் கேட்கிறார்கள்.

பொதுவாகவே வீட்டு உரிமையாளர்கள் வாடகைக்கு வருபவர்களிடம் செக்யூரிட்டி டெபாசிட் தொகையை வாங்குவது என்பது அவர்களுக்கான ஒரு பாதுகாப்பை ஏற்படுத்துவதற்காகத்தான். இப்படியான நிலையில் பெங்களூர் போய் சேர்ந்த ஒரு வீட்டு உரிமையாளர் செக்யூரிட்டி டெபாசிட் தொகையை வழங்காமல் திடீரென்று மாயமானதாக ஒரு நபர் வெளியிட்டுள்ள பதிவு பலருடைய கவனத்தையும் பெற்றுள்ளது. பெங்களூரில் வாடகைக்கு குடியிருக்க கூடிய நபர்கள் வீட்டு உரிமையாளர்களிடம் இருந்து பல இன்னல்களை சந்திப்பதாக கூறப்படுகிறது. திடீரென வாடகையை உயர்த்துவது மற்றும் அதிகபட்ச தொகையை செக்யூரிட்டி டெபாசிட் தொகையாக கேட்பது என அட்டூழியம் செய்கிறார்கள்.

   

இப்படியான நிலையில் பெங்களூரில் வேலை செய்யக்கூடிய ஒரு நபர் pdm லே-அவுட் பகுதியில் ஒரு வீட்டில் வாடகைக்கு தங்கியிருந்தேன், அந்த வீட்டிலிருந்து நான் தற்போது வேறு இடத்திற்கு மாறிவிட்டேன். அந்த வீட்டை காலி செய்து வாடகை ஒப்பந்தத்தின்படி முறையாக சாவியை உரிமையாளரிடம் ஒப்படைத்து விட்டேன். ஆனால் உரிமையாளர் நான் அந்த இடத்தை காலி செய்ததிலிருந்து என்னுடைய போன் கால்களை எடுக்கவில்லை. என்னுடைய செக்யூரிட்டி டெபாசிட் தொகையை அவர் இதுவரை வழங்கவில்லை. அவரை என்னால் தொடர்பு கொள்ளவே முடியவில்லை என்று அந்த நபர் பதிவிட்டுள்ளார்.

   

பெங்களூரில் தற்போது இது போன்ற மோசடிகள் அதிகமாக நடைபெறுகிறது. இது மிக மோசமான ஒரு செயல் என்றும் பெங்களூரு மாநகராட்சி நிர்வாகமும் கர்நாடக மாநில காவல்துறையும் தனக்கு உதவி செய்ய வேண்டும் என்றும் அந்த நபர் கோரிக்கை விடுத்துள்ளார். பெங்களூரில் தற்போது இதுபோல பலரும் நடந்து கொள்வதால் பலரும் உங்களுடைய டெபாசிட் தொகையை திரும்ப பெறாமல் ஒருபோதும் வீட்டை காலி செய்து சாவியை உரிமையாளரிடம் ஒப்படைக்க வேண்டாம் என்று அந்த நபர் அறிவுறுத்தியுள்ளார்.