தென் மாநிலங்களுக்கு செக்… CM விஜய் அமைத்த மாஸ் டீம்…. நிர்மல் குமார், ராஜ்மோகனுக்கு புதிய பொறுப்பு…. அதிரடி திருப்பம்….!

By Nanthini on ஆடி 26, 2026

Spread the love

தென் மாநிலங்களுக்கு இடையே நிலவும் எல்லைப் பிரச்சனைகள், நதிநீர் பங்கீடு உள்ளிட்ட பொதுவான விவகாரங்களுக்கு பேச்சுவார்த்தை மூலம் சுமுகத் தீர்வு காண்பதை முதன்மை நோக்கமாகக் கொண்டு இயங்கும் தென் மண்டல கவுன்சிலுக்கான தமிழகக் குழு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முதலமைச்சர் விஜய் தலைமையிலான இந்தக் குழுவில் அமைச்சர்கள் நிர்மல் குமார், ராஜ்மோகன் ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்; மேலும், மாநில தலைமைச் செயலாளர் சாய்குமாரும் இந்தக் கவுன்சிலில் இடம்பெற்றுள்ளார். மாநிலங்களுக்கு இடையிலான உறவை மேம்படுத்தவும், நிலுவையில் உள்ள முக்கியத் திட்டங்கள் மற்றும் பிரச்சனைகளுக்குத் தீர்வு காணவும் இந்தக் குழு முனைப்புடன் செயல்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.