பொதுத்துறை வங்கிகள் உள்ளிட்ட நிதி அமைப்புகளுக்கு மத்திய நிதியமைச்சகம் புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. எரிபொருள் சிக்கன நடவடிக்கை மற்றும் தேவையற்ற செலவுகளைக் குறைக்கும் நோக்கில் இந்த அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய கட்டுப்பாடுகளின்படி, வங்கி அதிகாரிகள் தேவையற்ற வெளிநாட்டுப் பயணங்களைத் தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், முக்கியக் கூட்டங்களை நேரில் நடத்துவதற்குப் பதிலாக, முடிந்தவரை வீடியோ கான்பரன்ஸ் (காணொளி காட்சி) மூலம் நடத்த வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது
அரசாங்கம் திடீரென இத்தகைய கட்டுப்பாடுகளை விதித்துள்ளதால், நாட்டில் மீண்டும் ‘லாக்டவுன்’ (ஊரடங்கு) போன்ற சூழ்நிலை ஏற்படுமோ என்ற அச்சமும், பரவலும் பொதுமக்கள் மத்தியில் தற்பொழுது எழுந்துள்ளது.
