விடுதலை சிறுத்தைகள் கட்சியில் 39 பாராளுமன்ற தொகுதிகள் அடிப்படையில் மண்டல செயலாளர்கள் புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ளதாக சற்றுமுன் அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதுவரை பாராளுமன்ற தொகுதிக்கு ஒரு மண்டல செயலாளர் வீதம் இருந்த நிலையில் அந்த கட்டமைப்பை தற்போது மாற்றி ஒரு பாராளுமன்ற தொகுதிக்கு ஒரு மண்டல செயலாளர் என்றும் இரண்டு சட்டமன்ற தொகுதிகளுக்கு ஒரு மண்டல துணை செயலாளர் எனவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
அதன்படி தற்போது ஆறு தொகுதிகளுக்கு மூன்று மண்டல துணைச் செயலாளர்கள் பொறுப்பு புதிதாக உருவாக்கப்பட்டு நியமிக்கப்பட்டுள்ளது. விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் புதிய மண்டல செயலாளர்கள் மற்றும் துணை செயலாளர்கள் பட்டியலை அமெரிக்காவிலிருந்து தற்போது வெளியிட்டுள்ளார். இதன் மூலமாக 156 பொறுப்புகளுக்கு புதிதாக நிர்வாகிகள் அனைவரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
