புதிய ரேஷன் கார்டுக்கு அப்ளை பண்ணிருக்கீங்களா?… அமைச்சர் சக்கரபாணி வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு …!

By Nanthini on மாசி 26, 2026

Spread the love

தமிழகத்தில் கடந்த 2021-ஆம் ஆண்டு முதல் தற்போது வரை சுமார் 21 லட்சம் புதிய ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளதாக உணவு மற்றும் நுகர்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். திண்டுக்கல் மாவட்டம் கள்ளிமந்தையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய அவர், புதிய கார்டுகள் கோரி விண்ணப்பிக்கும் தகுதியுள்ள நபர்களுக்கு எவ்வித தடையுமின்றி கார்டுகள் வழங்கும் பணிகள் தொய்வின்றி நடைபெற்று வருவதாக உறுதி அளித்தார். இது அரசின் மக்கள் நலத்திட்டங்கள் அடித்தட்டு மக்களைச் சென்றடைவதை உறுதி செய்யும் ஒரு முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.

தற்போது தமிழகம் முழுவதும் புதிய ரேஷன் கார்டுகளுக்காக காத்திருப்பவர்களுக்கு ஒரு நற்செய்தியாக, 2025 டிசம்பர் மாதத்திற்கு முன்னதாக விண்ணப்பித்தவர்களுக்கு ஸ்மார்ட் கார்டுகள் (Smart Cards) வழங்கும் பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகின்றன. விண்ணப்பங்கள் முறையாக ஆய்வு செய்யப்பட்டு, தகுதியான பயனாளிகளுக்கு விரைந்து கார்டுகள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. இந்த நடவடிக்கையின் மூலம் குடும்பங்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்கள் தடையின்றி கிடைப்பதுடன், அரசின் பல்வேறு சமூகப் பாதுகாப்புத் திட்டங்களின் பலன்களையும் அவர்கள் எளிதாகப் பெற முடியும்.