தமிழகத்தில் ரேஷன் அட்டை வைத்துள்ள பயனாளிகளுக்கு நியாயவிலை கடைகளில் உணவுப் பொருள்கள் இலவசமாகவும் மலிவு விலையிலும் வழங்கப்படுகின்றன. இதனால் பல லட்சம் மக்கள் பயனடைந்து வருகிறார்கள். இந்த உணவுப் பொருள்களை பெறுவதற்கும் அரசு வழங்கக்கூடிய பல நிதி உதவிகளை பெறுவதற்கும் ரேஷன் அட்டை என்பதை மிக முக்கியமான ஆவணமாக உள்ளது. தற்போது அரசு சார்பில் வழங்கப்பட்டு வரும் மகளிர் உரிமைத்தொகை பெறுவதற்கும் ரேஷன் கார்டு என்பது முக்கியமான ஆவணமாகும். ரேஷன் அட்டை இல்லாதவர்கள் மகளிர் உரிமை தொகைக்கு விண்ணப்பிக்க முடியாது.
எனவே ரேஷன் கார்டு பெறுவதற்காக பல லட்சம் மக்கள் விண்ணப்பித்து காத்திருக்கின்றனர். ஆனால் பல மாதங்கள் ஆகியும் ரேஷன் கார்டு இன்னும் வரவில்லை. இப்படியான நிலையில் ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்த ஒரே வாரத்தில் ரேஷன் கார்டு தொடர்பாக விசாரணையை வீட்டிற்கு வந்து விசாரிக்க அதிகாரிகள் தற்போது தொடங்கியுள்ளனர். அடுத்த சில வாரங்களில் ரேஷன் கார்டு கிடைத்துவிடும் என்று தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி தமிழக அரசு சார்பாக உங்களுடன் ஸ்டாலின் முகாம் தமிழகம் முழுவதும் நடத்தப்பட்டு வரும் நிலையில் இந்த முகாமில் 46 சேவைகளுக்கு தீர்வு கிடைத்து வருகிறது. அதன்படி ரேஷன் கார்டு தொடர்பாக உங்களுடன் ஸ்டாலின் முகாமில் விண்ணப்பித்தவர்களுக்கு உடனடியாக அதிகாரிகள் வீட்டுக்கு வந்து விசாரணை முடிந்து கார்டு கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனவே 45 நாட்களுக்குள் ரேஷன் கார்டு வீடு தேடி வந்து விடும் என்று அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் நடிகருமான விஜய் நடிப்பில் உருவான ‘ஜனநாயகன்’ திரைப்படம், தணிக்கை சிக்கல்கள் மற்றும் தேர்தல் நடத்தை…
புதுச்சேரி மற்றும் தமிழக எல்லைப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்தச் சம்பவம், மனித உறவுகளுக்கு இடையே பணப் பரிமாற்றம்…
செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் அருகே காந்தி நகரில் வாடகைக்கு தங்கி, ஒரகடம் ஃபாக்ஸ்கான் நிறுவனத்தில் பணியாற்றி வந்த தேனி மாவட்டத்தைச்…
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், அக்கட்சியின் கொள்கை முழக்கத்தோடு கூடிய தேர்தல் அறிக்கையை சமீபத்தில் வெளியிட்டு அரசியல் களத்தில்…
தமிழக அரசியல் களம் 2026 சட்டசபைத் தேர்தலை எதிர்நோக்கி அனல் பறந்து வரும் வேளையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர்…
நடிகர் விஜய் நடித்துள்ள 'ஜனநாயகன்' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் முன்பே இணையத்தில் கசிந்த சம்பவம் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…