இன்றைய உலகில் இயற்கை மிகவும் சீரழிந்து விட்டது. நீர் மாசுபாடு, காற்று மாசுபாடு, உணவில் கலப்படம் என எதிலுமே சுத்தம் இல்லை. இந்த காற்று மாசுபாடுக்கு காரணமாக தொழிற்சாலைகள் போன்றவை இருந்தாலும் வாகனங்களில் வெளியேறும் புகையினால் அதிக காற்று மாசு ஏற்படுகிறது என்று கூறுகிறார்கள். அதனால் பெட்ரோல் டீசல் வாகனங்களால் காற்றை மாசுபடுத்தும் புகை ஏற்படுவதால் விரைவில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மற்றும் எலக்ட்ரிக் கார்களின் பயன்பாட்டை அதிகரிக்க வேண்டும் என்று அரசு பல முன்னெடுப்புகளை எடுத்து வருகிறது.
அப்படி சமீபகாலமாக மிக பிரபலமாக இருப்பது எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள். அதை விருப்பப்பட்டு பலர் வாங்கினாலும் கூட இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் பெர்ஃபார்மன்ஸ் சரியாக கை கொடுப்பதில்லை. சிலர் சார்ஜ் போடும்போதே தீப்பற்றி எரியும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் செய்திகளை நாம் பார்த்திருப்போம். ஆனால் தரமானதாக எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை உருவாக்கி வரும் ஒரு நிறுவனம் தனது புதிய மாடல் ஸ்கூட்டர்களை அறிமுகப்படுத்தி இருக்கிறது.
அதுதான் பெங்களூரை தளமாகக் கொண்ட எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஸ்டார்ட் அப் ஆன River தனது மேம்படுத்தப்பட்ட புதிய ரக எலக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தியிருக்கிறது. இந்த River Indie எலக்ட்ரிக் ஸ்கூட்டர் பார்ப்பதற்கு பைக் போல மிகவும் தரமானதாக தெரிகிறது. அதன் சிறப்பு அம்சங்கள் என்ன என்பதை பற்றி இனி காண்போம்.
இந்த River Indie எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் 6.7 கிலோ வாட் மோட்டார் உள்ளது. இது ஃபுல் சார்ஜ் செய்யப்படும்போது 120 கிலோமீட்டர் வரை செல்லும். 800வாட் போர்ட்டபிள் சார்ஜர் மற்றும் வேகமாக சார்ஜ் செய்யக்கூடிய ஒரு சார்ஜர் உங்களுக்கு கிடைக்கும். இதன் மிக முக்கியமான சிறப்பான அம்சமாக கூறப்படுவது இதில் இருக்கும் சேமிப்பு இடம். மொத்தம் 55 லிட்டர் சேமிப்பு இடத்தை இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர் கொண்டு வருகிறது.
43 லிட்டர் இருக்கைக்கு கீழ் சேமிப்பு இடம். 12 லிட்டர் கையுறை பெட்டி விருப்பமான பாகங்கள் ஆகியவை இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் இருக்கிறது. அது மட்டுமல்லாமல் ஃபிளாஷ் சஸ்பென்ஷன் போன்றவை இருக்கிறது. இந்த River Indie ஸ்கூட்டியின் விலை தற்போது 1.38 லட்சம் ஆக இருக்கிறது. ஒரு சிறந்த அனுபவத்துடன் அதிக மைலேஜ் தரக்கூடிய எலக்ட்ரிக் ஸ்கூட்டரை நீங்கள் தேடுகிறீர்கள் என்றால் இந்த River Indie சிறந்த தேர்வாக இருக்கும்.