
CINEMA
“இன்னும் இரண்டு வாரம் தான் டைம்”.. ஜெய்பீம் படத்தால் சூர்யாவுக்கு வந்த புதிய சிக்கல்… நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு..!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக கலக்கி கொண்டிருக்கும் சூர்யா நடிப்பில் ஞானவேல் இயக்கத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் ஜெய் பீம். 2D என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்த இந்த திரைப்படத்தில் மணிகண்டன், ராஜீஷா விஜயன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இதில் இருளர் சமூகத்தினர் மீது போலீசார் பொய் வழக்குகளை போட்டு மனித உரிமை மீறல்களின் ஈடுபடுவதை காட்டும் படமாக இந்த திரைப்படம் அமைந்திருந்தது. இந்த படம் வெளியாகி மிகப் பெரிய அளவில் வெற்றி பெற்ற நிலையில் சூரியாவுக்கும் பாராட்டுக்கள் குவிந்தன.
அதேசமயம் இந்த படத்தில் குறவர் இன மக்களை இழிவு படுத்தியதாக புகார்கள் எழுந்தது. அதாவது குறவர் சமூகத்தை சேர்ந்தவர்களை தவறாக சித்தரிக்கும் நோக்கத்தில் இந்த திரைப்படத்தில் சில காட்சிகள் இடம் பெற்று இருந்ததாக தயாரிப்பாளர் மற்றும் நடிகர் சூர்யா மீதும் இயக்குனர் ஞானவேல் மீதும் குறவர் நல வாழ்வு சங்கத்தின் தலைவர் முருகேசன் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார்.
இந்த புகாரை நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில் இந்த புகார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணையில் தயாரிப்பாளர் என்ற வகையில் சூர்யாவையும் இயக்குனர் ஞானவேலையும் எதிர்மனுதாரராக சேர்ந்த நீதிமன்றம் மனு தொடர்பாக இருவரும் பதில் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டது. இரண்டு வாரங்களில் பதிலளிக்க வேண்டும் என்று நீதிபதி கூறி வழக்கை ஒத்திவைத்த நிலையில் தற்போது ஜெய்பீம் திரைப்படத்தால் சூர்யாவுக்கு புதிய சிக்கல் இருந்துள்ளது.