மனிதத் தொண்டையில் புதிய உறுப்பு ஒன்று இருப்பதாக நெதர்லாந்தில் உள்ள விஞ்ஞானி ஒருவர் கண்டுபிடித்துள்ளார். புற்றுநோய் ஸ்கேனின் பரிசோதனையில் தெரியவந்துள்ளது. தொண்டையின் மேல் பகுதியில் ஆழமாக இருக்கும் சில சுரபிகளை தற்செயலாக பார்த்துள்ளார். கடந்த 2026 ஆம் ஆண்டு புதிய புற்றுநோய் ஸ்கேன் பரிசோதனை மேற்கொண்டு இருந்தது. இந்த கண்டுபிடிப்பு மனித உடற்கூறியல் பற்றிய புரிதலை மாற்றி உள்ளதாம். இந்த புதிய கண்டுபிடிப்புகள் 2 டூபரியால் உமிழ்நீர் சுரப்பிகள் என பெயர் சூட்டியுள்ளனர். இது மூக்கின் பின்புறம் உள்ள பகுதிகளை ஈரமாக வைத்திருக்க உதவுவதாக நம்புகின்றனர். தலை மற்றும் கழுத்து பகுதியில் உள்ள புற்றுநோய் சிகிச்சையை பெரும் நோயாளிகளுக்கு தரத்தை மேம்படுத்தும் வகையில் இந்த கண்டுபிடிப்பு இருக்கலாம் என கருதுகின்றனர்.
சுமார் 1.5 ஆகல நீளமுள்ள இந்த சுரப்பிகள் இதுவரை அறியப்பட்ட முக்கிய உமல்நீர் சுரப்பிகளை போல இருக்கிறதாம். புற்றுநோய் சிகிச்சையின் போது ஏற்படும் விளைவுகளை குறைக்க இந்த சுரப்பி உதவலாம் என விஞ்ஞானிகள் கூறுகின்றன. ஏற்கனவே அறியப்பட்ட உமிழ்நீர் சுரப்பிகள் சிகிச்சையின் போது சேதம் அடைவதால் நோயாளிகள் நிறைய பக்க விளைவுகள் வருகிறது. சாப்பிட முடியாமல் ஏன் தண்ணீர் கூட விழுங்க முடியாமல் மிகவும் சிரமப்படுகிறார்கள். இதுவரை 700க்கும் மேற்பட்ட நோயாளிகளின் சிகிச்சை ஆராய்ச்சியில் புதிய சுரப்பிகள் எவ்வளவு கதிர்வீச்சு கொடுக்கிறது அதனால் ஏற்படும் சிக்கல்கள் தெரியவந்தது. புதிய சுரப்பியை சேதப்படுத்தாமல் கதிரியக்கச் சிகிச்சை அளிக்கப்பட்டால் பக்க விளைவுகள் கணிசமாக குறைந்து நோயாளிகளின் வாழ்க்கையை மேம்படுத்த உதவும் ஆராய்ச்சியாளர்கள் நம்புகிறார்கள்.
