தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. அதே சமயம் கூட்டணி குறித்த பேச்சு வார்த்தையும் மும்முரமாக நடந்து கொண்டிருக்கிறது. இதனிடையே பாஜக மற்றும் அதிமுக கூட்டணி வைத்திருந்தாலும் அவரவர் கட்சிக்குள்ளேயே மோதல் போக்கு என்பது நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. முக்கிய நிர்வாகிகள் பலரும் அதிமுகவிலிருந்து பிரிந்து செல்லும் நிலையில் இபிஎஸ் எதற்கும் செவி சாய்க்காமல் தன்னந்தனி ஆளாக நின்று அதிமுகவை வழிநடத்தி வருகின்றார்.
இப்படியான நிலையில் செங்கோட்டை அணை தொடர்ந்து டிடிவி தினகரன் டெல்லி செல்ல இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இபிஎஸ்- ஐ முதல்வர் வேட்பாளராக ஏற்க மறுத்து NDA கூட்டணியிலிருந்து விலகிய டிடிவி தினகரன், அமித்ஷாவை சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இந்த சந்திப்பு நடைபெறும் என டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதன்பிறகு சசிகலாவும் அமித்ஷாவை சந்திக்க உள்ளாராம். எனவே புதிய NDA கூட்டணி உருவாகும் என பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.
