வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி… பிப்ரவரி 15 முதல் தரமான சம்பவம் இருக்கு… தமிழகத்திற்கு வந்த அலெர்ட்…!

Spread the love

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக நிலவி வந்த கடும் பனிமூட்டம் மற்றும் வறண்ட வானிலைக்கு இடையே, வங்கக்கடலில் புதிய மாற்றங்கள் தென்படத் தொடங்கியுள்ளன. பூமத்திய ரேகைக்கு அருகிலுள்ள இந்தியப் பெருங்கடலின் கிழக்கு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதன் தாக்கத்தால், வரும் பிப்ரவரி 15-ம் தேதி வாக்கில் அதே பகுதியில் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

இந்த புதிய வானிலை மாற்றத்தின் காரணமாக, தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் பலத்த சூறாவளி காற்று வீசக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும், அவ்வப்போது 55 கிலோ மீட்டர் வேகம் வரையிலும் காற்று வீச வாய்ப்புள்ளது. இதனால் கடல் சீற்றத்துடன் காணப்படும் என்பதால், பிப்ரவரி 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

தமிழகத்தின் தற்போதைய நிலவரப்படி, தென் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, ஒரு சில கடலோர மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. குறிப்பாக தேனி, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்ற மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதேசமயம், சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளைப் பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டம் நிலவக்கூடும் என்றும், அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்ஸியஸ் வரை இருக்கக்கூடும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் உள்ளிட்ட வட மாவட்டங்களில் அதிகாலையில் பனிமூட்டத்தின் தாக்கம் தொடரும் என்பதால் வாகன ஓட்டிகள் கவனமாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Nanthini

Recent Posts

“நீதான்யா ரோஷமான மனுஷன்”…. “தவெக 30 சீட்களை தாண்டினால் மொட்டை அடிப்பேன்”…. சொன்னபடி மொட்டை அடித்த பிரசாந்த்…!

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் ஒட்டுமொத்த மாநிலத்தையும் அதிரவைத்துள்ளன. நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (தவெக), தான்…

17 seconds ago

“ஆதரவு கொடுக்கிறோம் ஆனா ஒரு கண்டிஷன்” இது நடக்கவே கூடாது.. காங்கிரஸ் வைத்த செக்.. விழிபிதுங்கி நிற்கும் விஜய்..!!

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் ஆட்சி அமைப்பதற்கு காங்கிரஸ் கட்சி தனது ஆதரவை வழங்க முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள்…

6 minutes ago

விளையாட்டு வீரர்களுக்கு இதுதான் மரியாதையா..? தங்கம் வென்றும் பலனில்லை.. ரயில் நிலையத்தில் 12 மணிநேரம் கண்ணீருடன்… சமூக வலைதளங்களில் குவியும் கண்டனங்கள்…!!

அதிர்ச்சிகரமான இந்தச் சம்பவத்தில், தங்கம் வென்ற போலந்து போல்ட் (Pole Vault) வீராங்கனை ஒருவர், தனது விளையாட்டு உபகரணங்களுடன் ரயிலில்…

8 minutes ago

“சுக்கிரன் தரும் ‘விபரீத ராஜயோகம்’… இந்த 3 ராசிக்காரர்களுக்குக் கடும் சோதனை.. உங்க ராசி இதுல இருக்கா?”

சுக்கிரன் தனது சொந்த ராசியான ரிஷபத்தில் சஞ்சரிக்கும் இந்த காலகட்டம், பொதுவாக சுப பலன்களைத் தரும் எனக் கருதப்பட்டாலும், 6,…

9 minutes ago

“விஜய்யை வாழ்த்தினால் தப்பா..?” இதுதான் உண்மையான தலைமை… சாதி, மதம் இல்லாத அரசியலே எனது விருப்பம்… தவெக-வுக்கு ஆதரவாக அஸ்வின் வீசிய அனல் பறக்கும் கருத்துகள்..!!!

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கு வாழ்த்துத் தெரிவித்ததற்காக எழுந்த விமர்சனங்களுக்குப் பிரபல கிரிக்கெட் வீரர் அஸ்வின் தற்போது பதிலளித்துள்ளார்.…

12 minutes ago

“கேப்டன்னா இப்படி இருக்கணும்” சதம் அடிக்காதது ஏன்? மனம்திறந்து பேசிய சஞ்சு: கிரிக்கெட் உலகமே பாராட்டும் அந்தப் பண்பு..!!

டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் சஞ்சு சாம்சன் அதிரடியாக விளையாடினாலும், துரதிர்ஷ்டவசமாக சதம் அடிக்கும் வாய்ப்பைத் தவறவிட்டார்.…

14 minutes ago