அதிமுகவுடன் கூட்டணி.. அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்… செம குஷியில் எடப்பாடி….!

By Nanthini on மார்கழி 22, 2025

Spread the love

தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு விடுகின்றன. அதே சமயம் இந்த தேர்தலை எதிர்கொள்ள அதிமுக பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளதால் இந்த முறை ஆட்சியில் அமர பல வியூகங்கள் ஒதுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக கூட்டணி கட்சிகளுடன் தொடர் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருகிறது. அதே சமயம் மாற்றுக் கட்சியினரை தங்கள் கட்சியில் இணைக்கும் பணியிலும் ஈபிஎஸ் தீவிரம் காட்டி வருகின்றார்.

இந்நிலையில் 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம் பெறுவதை புதிய நீதி கட்சியின் தலைவர் ஏசி சண்முகம் உறுதிப்படுத்தியுள்ளார். குறைந்தது ஆறு தொகுதிகளை கேட்டு பெற திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 2024 நாடாளுமன்ற தேர்தலில் வேலூரில் தாமரை சின்னத்தில் போட்டியிட்ட அவர் தோல்வியடைந்தார். இந்த முறை வேலூரில் உள்ள ஏதேனும் ஒரு தொகுதியில் போட்டியிட அவர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.