கடந்த வாரம் அஹமதாபாத்தில் இருந்து லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் மருத்துவ மாணவர் விடுதி மீது மோதி விபத்துக்குள்ளானது. அந்த விபத்தில் விமானத்தில் பயணித்த 242 பேரில் ஒருவர் மட்டும் உயிர் தப்ப மற்ற அனைவருமே உயிரிழந்தனர். அதுமட்டுமல்லாமல் மாணவர் விடுதியில் இருந்த மாணவர்களும் உயிரிழந்த நிலையில் மொத்தம் 270க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த விபத்து இந்தியா முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இப்படியான நிலையில் விபத்துக்கு பிறகு ஏர் இந்தியா விமானங்கள் சில நேற்றைய தினம் சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டது.
விபத்துக்களை குறைப்பதற்கு புதிய கண்டுபிடிப்பு ஒன்றை கண்டறிந்துள்ளனர். அதாவது விமானத்தில் ஏதாவது கோளாறுகள் ஏற்பட்டால் பயணிகள் இருக்கும் குறித்த பகுதி மட்டும் இரண்டு பெரிய பாராசூட்களுடன் தரையிறங்கும். அல்லது பெரிய பலூன்கள் மூலம் பாதுகாப்பாக தரையில் இறக்கப்படும். இதனால் வானில் பறந்து கொண்டிருக்கும்போது சேதம் ஏற்பட்டால் உயிர் சேதங்கள் குறையும். இந்த புதிய தொழில்நுட்பம் கூடிய விரைவில் நடைமுறைக்கு வரும் என்று தெரிகிறது.
